Sunday, December 12, 2010

உன் நினைவுகள்...!




மீண்டுமொருமுறை
உன்னை
நினைவுப் படுத்தாதேயென்று
எச்சரிக்கும் கணங்களிலும்
உள்நெஞ்சுக்குள்
உதித்தெழுகிறது
உன்முகம்...!

உறக்கம் வராத
நள்ளிரவு நேரமெங்கும்
உன்னை மறக்க துடித்தும்
என் இதயம் வழியே
நினைவை உமிழ்ந்து
உதடுகளும் உச்சரிக்கிறது
உன் பெயரை...!


குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

போடி இவளே..

போடி இவளே..
நீயும்
உன் காதலும்
மன்னாங்கட்டியுமென சலித்தாலும்
கால்கள் உன் பின்னேயும்
மனசு உன் முன்னேயும் தானே
கிடக்கிறது!

Thursday, December 9, 2010

இறந்து விடுகிறேன்!!!



முடிந்த அளவு உன்னை 
மறந்து விடுகிறேன் !!!!
முடியவில்லை என்றால் 
இறந்து விடுகிறேன் !!!

Thursday, December 2, 2010

மிரட்டுகிறது,

"என் இதயம் என்னை மிரட்டுகிறது,
உன்னை ஒரு கணம் நினைக்க மறந்தாலும்
மறுகணம் துடிக்க மாட்டேன் என்று...!!"

Wednesday, December 1, 2010

மறந்து இருப்பேன்

"பிரிந்திருந்தாலும் மறந்து இருப்பேன். 

உன் நினைவை அல்ல பிரிவை..!!"

மரணம் நிச்சயம்

"உன்னை நேசித்திருந்தால் 

மறுக்கவோ, மறக்கவோ செய்திருப்பேன் ....

ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ...

மறுத்தாலோ, மறந்தாலோ, 

மரணம் நிச்சயம்"

காத்திருப்புகள்

"காத்திருப்புகள் சுகமாக தெரிந்தாலும்
அவை ஏமாற்றமாகும் போது
கண்கள் உன்னை அறியாமலே
கண்ணீர் சிந்தும்"

Sunday, October 24, 2010

கற்று கொடுக்கிறேன் வலிகளை……

நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஒரு மூலையிலிருந்து நீ
என்னை நேசித்தாய்…..
என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை
வெறுப்பதாய் இருந்தால்
அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை……

"மறந்துவிடு!"

ஒரு வார்த்தையில்
சொல்லிவிட்டாய்
"மறந்துவிடு!" என்று
உன் அந்த ஒரு வார்த்தையால்
ஏற்பட்ட வலி பற்றி
உனக்கு எங்கே தெரியப்போகிறது!!

பிரிவு

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும்
எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!

கவிதையாய்.........

உனக்கு கவிதை எழுத
தெரியாது என்று யார் சொன்னார்கள்...
உன் புத்தகம் அனைத்திலும்
எழுதி இருக்கிறாயே...
உன் பெயரே ஒரு கவிதையாய்.........

சொல்லி விட போகிறேன்...

சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும்
உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும்
காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே
சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை...

உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என் இரவுகளை
தின்றுகொன்டிருக்கின்ற்ன...

என்னோடு எப்போதும்
பேசும் நிலவிற்கு
இப்போதெல்லாம்
பதில் சொல்வதில்லை...

நீ கடக்கும்
இடமெல்லாம் என்
காலடிகள் காத்துகிடக்கின்றன...

எனக்கான உனது
பார்வைகாக
என் வாழ்வு
நகர்ந்து கொன்டிருக்கிறது...

" முகவரி "

எனக்கு
முகவரி இல்லை
என்றாலும்
உன்னுடைய
நிரந்திர முகவரி
நான் தான்.....

Tuesday, October 19, 2010

அன்பே !!!!!!

என்னோடு நீயிருந்தால்
வானம் கூட என் கைவசம்.....
என்னை விட்டு
நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்......
உன் பெயரை உச்சரித்தே
நிதமும் வாழ்கிறேன் .......
அன்பே
உன் சுவாசத்தில் மட்டுமே
நான் வாசம் செய்வேன் ..........!!!!!

நான் நானாக இல்லை...

காதல் வழியும் கண்களை
சிதைக்கும் புன்னகையை
உயிர் தொடும் விரல்களை
தூக்கம் பறிக்கும் குரலை
நிலை தடுமாற வைக்கும்
எல்லாம் மறந்து விடுகிறேன்
என்னை
மட்டும் திருப்பித்தந்து விடு
நான் நானாக இல்லை...

நம் காதல்..

உயிரெழுத்து நீயானாய்.
மெய்யெழுத்து நானானேன்.
இருவரும் சேர்ந்தோம்,
உயிர்மெய் எழுத்தானது
நம் காதல்.........

" ஒருத்தன் "

சிலவேளைகளில்
உன் வாழ்கையில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் இதயத்தில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் கனவு உலகில் ஒருத்தர் இருக்கலாம் -ஆனால்
நானும் உன்னுடைய ஒருத்தன் தான்! ...
உனகென்று எவரும் இல்லாதபோது.........

"உன் காதல் நினைவுகளை"

பிறக்கும் போது
நான் எதையும்
கொண்டு வரவில்லை ஆனால்;
நான்
இறக்கும் போது
கண்டிபாக கொண்டு செல்வேன்
"உன் காதல் நினைவுகளை"

Tuesday, May 18, 2010

இதுவே ......நீ....

என்னைப் போல் எந்நேரமும்...
நீ என்னை நினைக்காவிட்டாலும்......
என்றாவது, ஒரு நாள்....
நீ...
என்னை...நினைப்பாய் பெண்ணே .....
அந்நேரம் நான் உன்னை.நினைப்பேனா..... என,
நீ.... நினைப்பாய்...
இதுவே ......நீ....

Sunday, May 9, 2010

உள்ளம் மகிழ்கிறேன்!...

உருகும் மெழுகாயினும்
உள்ளம் மகிழ்கிறேன்!...
உயிர் துறப்பதெல்லாம்
உனக்காக
வேண்டி என்பதால்!.....

என் இதயத்திற்காக.........

உன் பிரிவின் கவலையில்
நான் கரைந்திருக்க
என் விழிகள் சிந்தியன
பனித்துளிகளை
இறந்து போன என் இதயத்திற்காக

என் மரணம் சொல்லக்கூடும்!

சொல்வதற்கு இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
வாழ்வதற்கு என்னிடம்
வாழ்க்கை இல்லை
முடிக்கொண்ட உன் இதயத்தின் சாவி
என்னிடத்தில் இல்லை
என்
மெளனம் சொல்ல மறந்த காதலை
ஒரு வேளை என் மரணம் சொல்லக்கூடும்!

உன் குரல்......

கசந்து போன என்
உன் நினைவுகளுடன்
கழிந்து சென்று கொண்டு இருக்கும்
நிமிடங்களுக்குள் .....
தேன்வார்த்து செல்கின்றது
சில மணித்துளிகளே என்றாலும்
உன் குரல்......

(படித்ததில் பிடித்தது)

Wednesday, May 5, 2010

உன்னில் இருக்கையில்..!!

நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை

பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!!

Aslam Shanah
படித்ததில் பிடித்தது

உண்மையானது.....!!

கையெழுத்து அழகானால்
தலை எழுத்து
நல்லா இருக்காதாம்...
உண்மையானது
உன்னால் அழகான
என் கையெழுத்தால்..!!

என் கடைசி ஆசை

என் கடைசி ஆசை
நான் இறந்த பிறகு என் இதயத்தை
எடுத்து...இதயமே இல்லாத என்
காதலிக்கு கொடுங்கள்..

என் அன்புக்கு

உன்னால்
உதாசின படுத்தப்பட்ட
என் அன்புக்கு இன்று
ஒரு வயது பூர்த்தி ஆகிறது.....
உன்னால் கொல்லபட்ட
என் உணர்வுகளும்
உன்னால் என் மனம் என்னும்
கல்லறையில் உயிர் ஓடு புதைக்கபட்ட
என் இதயமும் அதனுள் அடைக்கபட்ட
என் உன் நினைவுகளும்....
உயிர் அற்று வாழும் என்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன...
எனக்ககா என் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்த துடித்தாலும்..
அந்த ஒரு துளியினால்
உன்னேக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
என் கன்னத்தோடு நிறுத்தி விட்டன.........
உன்னால் சிதைக்கபட்ட கனவுகளுடன் நான் ......

பிரதீப் !!!!!
படித்ததில் பிடித்தது

வேகம்....

ஐந்து மாதங்கள்....
ஐந்து கோடி ஆண்டுகள் போல ஒரு பிரமிப்பு....
காலங்கள் அவ்வளவு வேகம்...,
இருந்தும் எண்ணங்கள் அதைவிட வேகம்....

உன் முகம் தானோ?....

நிலவும், சூரியனும் தூரத்திலிருந்தும்
என்னருகில் நீயிருப்பதால் தான்
அவர்களும் அருகிருந்து
ஒளிர்வது போல் தெரிகிறார்கள்....
சூரியனுக்கும், சந்திரனுக்கும்
ஒளி கொடுப்பது
உன் முகம் தானோ?....

Monday, April 26, 2010

என் மரணம்!















என் மரண வீட்டுக்கு
வர வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட
உங்களைப் பார்த்து
புன்னகைக்க முயற்சிக்கிறேன்!
நீங்கள் நிற்பது பற்றியும்
இருப்பது பற்றியும்
இன்னும் முடிவெடுக்கவில்லை
என்பது புரிகிறது!
நானும் தான்!

உங்களை வரவேற்பது குறித்து
சொல்லிவிட மறந்துவிட்டேன்;
இப்போதும் தாமதமாகவில்லை!
ஆனால் பூக்களின் மென்மையும்
மெத்தையின் சுகமும்
தடுத்துக் கொண்டிருக்கின்றன
எழும்புவதிலிருந்து;
முதன் முறையாக
அனுபவிப்பதால் இருக்கும்!
மன்னித்துவிடுங்கள்;
நாளை உங்களின் விமர்சனம்
இதைத் தவிர்த்து
வெளி வரட்டும்!

உச்சத்தில் அழும்
அவள் குறித்து
எனக்கு எந்தவித
பிரக்ஞைகளும் இல்லை;
என் அம்மாவாக இருக்கலாம்
நீங்கள் யோசிக்காதீர்கள்!
ஒரு கிழமை அதிகம்;
பிறகு சாப்பிடத்தான் வேண்டும்!

உங்கள் விசயத்துக்கு வருவோம்;
நீங்களும் பாவம்;
கறுப்பு ஆடைக்கும்
கொத்துப் பூவுக்கும்
அவகாசமில்லாமல்
அவதிப்படலாயிற்று!
கூடவே கண்ணீருக்கும்;
நீங்கள் எங்கே தான்
போவீர்கள்;

நேற்றைய எனக்கும்
இன்றைய உடலுக்கும்
அடையாளங் கண்டு தோற்று
பிதற்றத் தொடங்கியிருக்கிறீர்கள்;
"நல்ல ஆத்மா"
சிரிப்பு வருகிறது!
உதடுகள் அசைவதை
நீங்கள் கவனிக்கவில்லை
என்னை புறக்கணிப்பது
எப்போதும் இலகுவாக இருக்கிறது
உங்களுக்கு!

உங்கள் கண்ணீரின் ஈரம்
சீக்கிரம் காய்வது குறித்து
விசனமுறத் தொடங்கியிருக்கிறீர்கள்!
இதற்கும் ஒரு விதி
நேற்றே செய்திருக்கலாம் என்று
நீங்கள் யோசிப்பது புரிகிறது;
எனக்கெங்கே தெரியும்
இன்று இங்கே கிடப்பேனென்று
எல்லோரும் இதைத்தானே
இலகுவாக மறக்கிறோம்!

நான் உங்களுக்கு
என்ன செய்திருக்கிறேன்
என்பது நினைவிலில்லை;
நான் இந்த சமூகத்தில்
பிறப்பிக்கப்பட்டவள்!
விதிகளால் வளர்க்கப்பட்டவள்!
தீயதை நினைவுபடுத்துதல்
அந்த ஆயிரங்களில் ஒன்று!

சரி விடுங்கள்!
உங்களை நினைவுபடுத்தலாம்!
மூலையில் நிற்பவளுக்கும்
எனக்குமான வஞ்சம்
தீர்க்கப்படாது கிடக்கிறது!
ஆசைப் புதைகுழியில்
அமிழ்த்தப்பட்டு நிற்கிறது
பகிரப்பட்ட அன்பு!
ஈரமான காதல் கனவுகளுடன்
அங்கேயே திரிகிறது மனது!

ஏதோவொன்றுக்கான ஆதங்கத்தில்
எறியப்பட்டுக் கிடக்கிறது உயிர்!
அதோ! அந்தரத்தில்!
கடக்கப்பட்ட தருணங்களின்
கழிவுகளில் தொலைந்த
பாதி வாழ்க்கை
எரிந்து கொண்டிருக்கிறது
இதோ! இங்கே!
சாம்பலுடன்;
சாம்பிராணிக் குச்சி!

நான் போகவேண்டும்;
இப்போது!
எங்கேயோ!
உங்கள் அரிதாரத்தை
இங்கே வீணாக்காதீர்கள்!
நாளை நான் மீளப்
பிறக்கப் போவதில்லை!
வாழ்க்கை இனியில்லை!
இதற்குப் பிறகில்லை!


படித்ததில் பிடித்தது

Friday, April 9, 2010

மறந்துவிடவே நினைக்கிறேன்

நீ
மறந்துவிட சொல்லும்
பொழுதுகளிலெல்லாம்
மறந்துவிடவே நினைக்கிறேன்
உன்னை அல்ல
உயிரை..!!!!

உயிர் அழும் ஓசை

உன்
முகம் காண
ஆண்டுகளாகக் காத்திருந்தேன்

நீயோ
என் கண்களில்
உன் பிரிவின் கண்ணீரை
தந்து விட்டு
என் கண் மறைவாய்
சென்று விட்டாய்

ஆயிரம் சொந்தங்கள்
என்னுடன் இருந்தும்
நீ இல்லாத் தனிமையில்
உயிர் தவிக்கிறேன்

என் உயிர் அழும் ஓசை
உனக்கு
கேட்கவில்லையா ?

உன் நினைவுகள்

உன்னை
மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி
ஓடிக்கொண்டே இருகிறேன்

நான் ஓடும்போதெல்லாம்
என் நிழலாக
உன் நினைவுகளே
என்னை
துரத்திக்கொண்டு வருகிறது

எங்கும் நிறைந்திருக்கும்
வானம் போல்

உன் நினைவுகளே
என் மனவானில்
என்றும் நிலைத்திருக்கிறது

நீயில்லாத நான்

நீயில்லாத நான்
நிலவில்லா வானம்

நீயில்லாத நான்
நிறமில்லா வானவில்

நீயில்லாத நான்
மழையில்லா மேகம்

நீயில்லாத நான்
நீரில்லா மீன்

நீயில்லாத நான்
ஓலியில்லா ஓசை

நீயில்லாத நான்
நிறமில்லா ஓவியம்

நீயில்லாத நான்
இமையில்லா தூக்கம்

நீயில்லாத நான்
துடிப்பில்லா இதயம்

நீயில்லாத நான்
உயிரில்லா உருவம்

நீயில்லாத நான்
முடிவில்லா இந்த கவிதை

உன் இதயம் மறுப்பதேன்

ஒரு நிமிடம்
என் விழிகள் காண
உன் முகம் தருவாயா

அந்த சிறு நிமிடம்
பெரும் யுகமாகும்
வரம் தருவாயா

என் விழிகள் மூடி
உன்னை நினைக்கையில்
மட்டும்
அழுகை வருவதேன்

என் அளவில்லா
அன்பை நினைக்க
மட்டும்
உன் இதயம் மறுப்பதேன்

நான் தெரிந்துகொண்டேன்

என் முகம் காண மறுக்கும் உன் விழியில்

என் காதோடு பேச மறுக்கும் உன் குரலில்

என் நினைவை நினைக்க மறுக்கும் உன் நினைவில்

என் துடிப்பை உணர மறுக்கும் உன் மனதில்

என்னையே மறக்க நினைக்கும் உன்னில்

நான் தெரிந்துகொண்டேன்

என்னை நீ வெறுத்து சென்றதை

என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை

அவள்

என் கவிதையின்
கருவானவள் - அவள்

என் வரிகளின்
உருவானவள் – அவள்

என் மகிழ்ச்சியின்
பிறந்தநாள் – அவள்

என் பகலின்
விழிப்பானவள் – அவள்

என் இரவின்
உறக்கமானவள் – அவள்

என் விழியின்
ஒளியானவள் – அவள்

என் நினைவின்
நிஜமானவள் – அவள்

என் உயிரின்
துடிப்பானவள் – அவள்

என் இதயத்தின்
வாசமானவள் – அவள்

இன்று இல்லை
என்வசம் – அவள்

நீ வருவாயா…?

நீ என்னை விட்டுப்
பிரிந்து தொலைவில்
சென்று விட்டாய்

நீ தொலைத்த இடத்தில்
உன் நினைவுடன் என்றும்

உனக்காகக் காத்திருக்கிறேன்
யுகங்கள் காத்திருப்பேன்

உன் விழியை
ஒரு முறை காண

உன் மொழியை
ஒரு முறை கேட்க

நீ வருவாயா…?
உனக்காகக் காத்திருக்கிறேன்

மறக்க நினைத்தாலும்..!!!

நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு

நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று

என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!

எதை நினைப்பேன்
எதை மறப்பேன்

நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்

என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்

உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்

உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்

நான் சுவசிப்பதையே..!!

என் விரல்கள்
உன் பெயரை எழுத மறந்தால்
என் கைகளை
நானே துண்டித்துவிடுவேன்

என் நடைகள்
உன் பாதை நடக்க மறந்தால்
என் கால்களை
நானே முறித்துவிடுவேன்

என் விழிகள்
உன் முகம் காண மறந்தால்
என் இமைகளை
நானே எரித்துவிடுவேன்

என் நினைவு
உன்னை நினைக்க மறந்தால்
என் நினைவை
நானே அழித்துவிடுவேன்

என் இதயம்
உன்னில் துடிக்க மறந்தால்
என் துடிப்பை
நானே தடுத்துவிடுவேன்

என் உயிர்
உன்னை தேட மறந்தால்
நான் சுவசிப்பதையே நிறுத்திவிடுவேன்

உயிர் வாழ்கிறாய் – நீ

என் இதயம் துடிப்பதை
நான் இதுவரை
கண்டதில்லை

இன்று கண்டுகொண்டேன்
உன் அன்பின் ஆழத்தில்

விடாமல் துடிக்கும்
என் இதய துடிப்பாய்
என்னுள் என்றும்
உயிர் வாழ்கிறாய் – நீ

நான் மறக்கவில்லை..........

மறக்கவே முடியவில்லை
உன்னை சந்தித்தபின்
உன்னுடன் சேர்ந்து வலம் வந்த
அந்த இனிய நாட்களை

என் உள்ளத்தின்
உள்ளில் பொங்கியெழும்
உன் நினைவுகளை மட்டுமே
நினைத்துக்கொண்டு
என் நாட்களை
நான் கடந்துவருகிறேன்

உன் நினைவுகளால்
என் இதயம் நிறைந்த
அந்த அழகான நாட்களை
கவிதையாக எழுதிட
இன்னமும் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்
வழிந்தோடும் என் கண்ணீருடன்..!!!
நம் நினைவுகளை
கடந்து வந்த
அந்த வசந்த நாட்களை
நான் மறக்கவில்லை
மறக்கவும் முயல்வதில்லை....

உன் நினைவுகள் என்னில்..!!!

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன் என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்

நாளை சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்

எல்லாம் முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

எவ்வளவோ முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்

நான் பேசிய வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்

நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து போகலாம்

உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்

இந்த உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள் என்னில்
என்றும் உயிர் வாழ்ந்து
கொண்டேயிருக்கும்

நீ என்னை மறக்கும் தோறும்..!!!

என் உள்ளத்தின்
காயங்களை எல்லாம்
உன்னிடம்
சொல்லத் துடிக்கிறேன்

நான் காத்திருந்தாலும்
கவனிக்காததுபோல்
என்னை காயப்படுத்திச்
செல்கிறாய்!

நீ என்னை
வெறுத்து போகும்
ஒவ்வொரு கணமும்
கடலாய் கண்ணீர் வடிக்கிறேன்!

நீ என்னை தவிர்ப்பதை
உணர்ந்து
உயிர் தவித்து போகிறேன்

நாம் ஒன்றாகப் பயணித்த
நம் பாதச் சுவடுகள்
இன்றும் என் மனதில்
ஒன்றாகவே இருக்கின்றன

நீ எனக்குள் இத்தனை
வலிகளை தந்தபோதும்
உன் நினைவுகள் எதையும்
நான் அழிக்கவில்லை

என்னுயிரை நானே
எப்படி அழிக்க முடியும்

நீ என்னை மறக்கும் தோறும்
உன் நினைவுகள் என் நெஞ்சில்
உயிர்த்தெழுந்து கொண்டேயிருக்கும்

Thursday, April 8, 2010

நான் மட்டும் எதற்காக…?

ஓர் சந்தோசப் பூங்காவை
என் நெஞ்சோடு நான் வளர்க்க
அதில் உன் பிரிவு தீயை மூட்டி
எனை விட்டு விலகி சென்றுவிட்டாய்

நம் உண்மைகள் எல்லாம்
உன்னால் இல்லை என்று ஆனபோது
வார்த்தை தீர்ந்த ஓர் ஊமைபோல்
ஊனமாகி உடைந்து போனேன்

அழுதழுது களைத்து விட்டேன்
அழுவதற்கு இனி கண்ணீருமில்லை
இழந்து விட்டேன் எல்லாம்
இனி இழப்பதற்கு என்று ஏதுமில்லை!

நான் என்பதே
என்னுடன் நீயிருக்கும் வரைதான்
இனி நீ இல்லை என்றானபோது
நான் மட்டும் எதற்காக…?

என் பிரிவையும் கொஞ்சம் நேசிப்பாயா..????

சத்தமில்லாமல்
என் இதயம் நுழைந்தாய்
நான் கண்ணிமைக்கும் நேரத்தில்
எனை கடந்து சென்று விட்டாய்

நீ வந்து போனதன் அடையாளமாய்
உடைந்து போன என் இதயத்துடன்
நான் மட்டும் இன்னமும் அங்கேயே
நின்றுகொண்டிருக்கிறேன்

கோபம் கூடக் கரைந்துபோகுமே
சில நாட்களில்…
என் மேல் நீ கொண்டிருப்பது
அந்த கோபத்தை விடக் கொடியதா ?

உன்னை மறந்துவிடுகிறேன் என
மறக்க நினைக்கிற
என் ஒவ்வொரு நொடியிலும்
நூறு முறை அதிகமாக
என் நினைவில் உயிர்க்கிறாய்

பிரிவு என்பதே
மீண்டும் உறவுக்காகத்தான்

உன் பிரிவின் வலியை கூட
சுகாமாகவே உணர்கிறேன்

என் பிரிவையும் கொஞ்சம்
நேசிப்பாயா..????

என் உயிரை விட மேலானது.!!!!

என் உயிரின் ஒவ்வொரு துளியில்
கண்ணீராய் வாழும் என் உயிரே

ஏன் என்னை வெறுக்குறாய்
நான் மௌனமாய் திரும்பி அழுகிறேன்
எனக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை

என்னை நீ எப்படி வேண்டுமானாலும்
வெறுத்துக்கொள்
ஆனால் என் இதயம் தொடும்
தூரத்திலேயே இரு

எனக்குள் உன் அன்பை
ஆழமாக புதைத்தவள் நீதானே

நெஞ்சில் எனக்கான அத்தனை
அன்பையும் வைத்துக்கொண்டு
வெறுப்பதாய் ஏன் உதடுகளால் நடிக்கிறாய்

உன் மீதான என் அன்பு என்பது
என் உயிரை விட மேலானது
என்பது உனக்கு தெரியாதா?

உன்னை மட்டுமே தேடுகிறேன்..!!!

தினமும் என் மனதில் நீ
புதிதாய் பிறக்கிறாய்
உன் நினைவை என்னில்
நிலைக்க வைக்கிறாய்

என் எண்ணங்கள் அனைத்தையும்
உனக்காக என மாற்றிவிட்டு
என் உயிராக உன்னை
உருமாற்றி செல்கிறாய்

என் உயிரில் என்றும்
உன் உருவமே

என் உணர்வில் என்றும்
உன் நினைவே

என் உச்சரிப்பில் என்றும்
உன் குரலே

என் விழிகளில் என்றும்
உன் முகமே

என் மூச்சில் என்றும்
உன் சுவாசமே

ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்

நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

உன்னை நினைபதற்க்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்

தொலைவினில் நீ இருந்தாலும்!!!

இமை பொழுது மட்டுமே
உன்னை மறக்க நினைத்தால்
கோடி முறை உதிக்கிறாய் என்னில்

உன்னை பிரிய நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஓர் உயிர் பிரியும் வலி என்னில்

உன் ஒரு நொடி
மௌனத்தைக் கூட
என்னால் தாங்க முடியவில்லை

இனி நீ இல்லாத என் நாட்களை
எப்படி என் இதயம் தாங்கும்?

உன் தொலைவினில் நான் இருந்தாலும்
என் அருகினில்தான் நீ என்றும்

எப்படி முடிந்தது..???

எப்படி முடிந்தது..???
உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது..???
என் இதயத்தின் துடிப்பாக
உன் இதயத்தை
கொடுத்துவிட்டு
என்னை மறந்துபோக !!!!

உனக்கு மட்டுமா?
இல்லை இல்லை
எனக்கே என்னை
கிடைக்காமல்
செய்து விட்டாயே??

நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை

பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!!!

என்ன செய்வேன் ?

நீ போகாத இடத்திற்கு
மிக அவசரமாய்ப் போகிறேன்
பிறகு பேசுகிறேன் என்றாய்
ஒரு நாள்

இல்லாத வேலையின்
பெயரை சொல்லி
சில அவசர வார்த்தைகளோடு
தொலைபேசியை அணைத்தாய்
மறுநாள்

நான் அனுப்பிய
குறுந்செய்தியின் பதிலுக்காக
காரணமின்றி என்னை
காத்திருக்க வைத்தாய்
வேறு ஒரு நாள்

என்னுடனான உன்
கடித தொடர்பையும்
காரணமின்றி
துண்டித்துவிட்டாய்
இன்னும் ஒரு நாள்

உன்னால் வேண்டாமென்று
வீசி எறியபட்ட
கண்ணாடியாய் இப்போது
உடைந்து சிதறி போய் விட்டேன்

இப்படி நீ என்னை
தவிர்த்தும் கூட

இதை அனைத்தையும் அறியாது
உன் பெயர் சொல்லி துடிக்கும்

என் இதயத்தை
என்ன செய்வேன் ?

நீ தெரிந்துகொள்வாய்…!!!

ஓர் அதிகாலையின்
அமைதியில்
சின்ன சின்ன
சண்டையுடன்தான்
ஆரம்பமானது
உனக்கும் எனக்குமான
பெயரிடப்படாத நம் உறவு

உன் ஒவ்வொரு
அசைவுகளையும்
என்னுடன் நீ
பகிர்ந்து கொண்டாய்

உன் நிகரில்லா
அன்பை தந்து
என்னில் உன்னை
உணர வைத்தாய்

உன் ஒவ்வொரு
வார்த்தையிலும்
உன் ஒவ்வொரு
நாளிலும்
உன் ஒவ்வொரு
நொடியிலும்
உன்னுடன் நான்
வாழ்ந்து இருக்கிறேன்

என்னிடம் இருந்த
நீ இன்றும்
அப்படியேதான் இருக்கிறாய்

என்னில் பாதியாக
என் இதயத்தின் பாதியாக
என் உயிரில் பாதியாக
இன்றும் நீயே!!!

என் நாட்களின்
ஒவ்வொரு விடியலிலும்
உன் வரவுக்காக
நான் காத்திருக்கிறேன்

நீயில்லாத
என் ஒவ்வொரு நொடியும்
எனக்கு கடினமாகவே
கரைகிறது

உன்னால் மௌனமாக
தொலைக்கபட்ட
அந்நாட்களை
நீ நினைத்துபார்

தெரிந்துகொள்வாய்
என் உயிரின் பாதியாக
இருந்த உன்னை !!!!

உன் நினைவுகளுடனே..!!

என் இதய சுவரில்
உன் அன்பால்
நான் எழுதிய
அழகிய கவிதையே

என் நொடிகள்
தோறும் என்னில்
உதிக்கும்
உன் நினைவுகளை

உன்னை நினைக்கும்
என் தவிப்புகளை
உன்னிடம்
சொல்ல துடிக்கிறேன்
நான் எப்படி
உணர்த்துவேன்
நீ எப்படி உணர்ந்து
கொள்ள போகிறாய்?

நீ ஏன்
என் இதயத்தில்
விழுந்தாய்?
மனமுடைந்து போகிறேன்

என் நினைவுகள்
எல்லாம்
உன்னையே தேடுகிறது

உன் பிரிவை எண்ணி
தினமும் தவிக்கிறேன்

உன்னை தேடியே
என் நினைவுகள்
கரைந்து கொண்டிருக்கிறது

உன் வருகைக்காக
நான் காத்திருக்கிறேன்

உன்
நினைவுகளுடனே
நான் இன்றும்
வாழ்ந்து வருகிறேன்

இப்போதும் நான் அழவில்லை.......

அன்று
நான் தோற்றுப்போய்
துவண்டிருந்த பொழுது
கண்கள் கலங்க என்னிடம்
சொன்னாய்

இனி உன் கண்கள் அழவேண்டாம்
உனக்காக எப்போதும் அழும்
என் கண்கள் என்று

இன்று
என் பார்வை கூட
உன்னிடம் பட வேண்டாம் என்கிறாய்

இப்போதும் நான் அழவில்லை
உன் கண்கள் உடனில்லை என்பதால்..!!!!

நானும் நீயும்

என் தனிமையில்
நிரம்பியிருப்பவை
மௌனமும்
கவிதையும்
மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது வெறுமையில்
உடனிருப்பது
மெல்லிசை
மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!

உனக்கு நினைவிருக்கிறதா?

இன்று நீ எனக்கு
விடை கொடுத்திருக்கலாம்
என் நினைவுகளுக்கு
தடையும் விதித்திருக்கலாம்

உனக்கு நினைவிருக்கிறதா?
நீ எனக்கு
தினமும் எழுதிய கடிதங்களை

காலம் தவறாத உன்
தொலைபேசி அழைப்புகளை

உன்னை சந்திக்கும் முன்
என்னுடன் இருந்த தோழமையை
நீ கோபம் கொண்டதை

உன் அன்பு என்னில் வலுப்பட
காரணமே இல்லாமல்
என்னுடனான உன் சண்டைகளை

உனக்காக நான் இழந்த
என் இரவுகளை

உனக்காக நான் தொலைத்த
என் உறவுகளை

நாம் ஒன்றாய் சந்தித்த
அந்த இனிய தருணங்களை
எளிதாக நீ மறந்ததுதான்
இன்னும் என்னால்
நம்ப முடியவில்லை

அமைதியாக இருந்த
என் மனதை உன் வரவால்
சலனப்படுதிவிட்டாய்

தென்றலாக
இருந்த என்னை
உன் பிரிவு புயலால்
தத்தளிக்க வைத்து விட்டாய்

அன்று என்னை பிடித்ததற்கும்
இன்று என்னை பிரிந்ததற்கும்
உன்னால் காரணம்
கண்டுபிடித்து சொல்ல முடிகிறது

நீ என்னை
மறந்ததை உணர்ந்து
என்னையே மறந்து போகிறேன்

நான் தவறாய் எழுதிய
என் வாழ்க்கைக் கணக்கில்
விடை மட்டும்
என்ன சரியாக வருமா ?

கனவாகிடக் கூடாதா?

என்னால்
நினைத்து பார்க்க முடியவில்லை
நீயில்லாமல் நான் சந்திக்கும்
இந்த துயர நாட்களை

ஒரு சில நாட்கள் தான்
உன்னுடன் பேசவில்லை
இதர நாட்களில்
நாம் பேசவில்லையே என்ற
என் தயக்கமே
இந்த இடைவெளிக்கு
காரணமாகிவிட்டது

இன்று என்
ஒவ்வொரு நொடியிலும்
அதற்க்கான விளக்கம்
அளித்துக் கொண்டிருக்கிறேன்
நீ கேட்கப் போவதில்லை
என்று தெரிந்தும்

நீ என்னுடன்
இருக்கும் வரை
என்னை விட்டு உன்னால்
எங்கே சென்று விடமுடியும்
என்ற என் நம்பிக்கையின்
அலட்சியமாக இருந்தேன்

இன்று
என்னிடமே நீ சொல்லாமல்
சென்று விட்ட பிறகுதான்
காலம் கடந்துவிட்டதை
அறிந்து துடிக்கிறேன்

நான் காணாத
ஓர் கனவாகிடக் கூடாதா?
நீ என்னைக் கடந்து போனது..!!!!

என் நெஞ்சில் அமைதில்லை

என் நெஞ்சில் அமைதில்லை
உன் நெஞ்சில் இரக்கமில்லை
என் கண்ணில் நீர் இல்லை
உன் கண்ணில் இரக்கமில்லை
தேடி தேடி களைத்துவிட்டேன்
தேடவிட்டு தவிக்கவிடடாய்,பாவி
நான் உனக்கு செய்த பாவம் தான் என்ன,
பார முகமாய் நீ இருக்க காரணம் தான் என்ன,
கவி கொண்டு வர கண்ணதாசன தான் இல்லை ,
தூதுவிட இரவு சூரியனும் இல்லை..........

Wednesday, April 7, 2010

நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!

என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்
நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!

நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!

வாய் இருந்தும் ஊமையாய்.

உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன.
ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்
இருந்தும் என்னால் பேச முடியவில்லை.

ஏன்?
நான் பூரணமடையாதவனா?
இல்லை குறைபாடு உடையவனா?

என்னுள் மட்டுமே என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.

ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்.

இன்னொருத்தனை…..

நேற்று வரை என்னை
துயிலெளுப்பிய குயில்
இன்று துயிலெளுப்புகிறது
இன்னொருத்தனை…..

கார‌ணம் என்ன‌???

என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!
காரணம்; உனது அப்பா, அம்மா மற்றும் உனது உற‌வினர்களுக்கு பயந்தல்ல!!!
நீ என் காதலை மெளனம்மாக்கிவிடுவாயோ என்றுதான்!!!
ஆனால் மெளன‌மாக‌ இருக்கவும் முடிய‌வில்லை!
கார‌ண‌ம்; க‌டைசிவ‌ரையிலும் என் காத‌லை உன்னிட‌ம் சொல்லாம‌ல் போய்விடுவேனோ என்றுதான்!!!
அத‌னால்தான் சொல்லாமல் சொன்னேன் என் காத‌லை உன்னிட‌ம்!
ஆனால் நீயோ என் காதலை புரிந்தும் புரியாம‌ல் இருந்துவிட்டாயே உயிரே!
அத‌ர்க்கு கார‌ணம் என்ன‌???

"நீயும் என்னைக் காதலித்தாயா"?

என்னவளே!
மீண்டும் சந்திப்போம்
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக் காதலித்தாயா"?

அவதாரமாகப் பிறந்தவள்………

இந்த உலகத்தில்
எத்தனையோ பேர் கடவுளின்
அவதாரமாகப் பிறந்ததாக
இலக்கியங்கள் சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
அவர்களையும் தாண்டி
காதலின் காதலின் அவதாரமாகப் பிறந்தவள்………

Tuesday, April 6, 2010

உயில்.........

கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே
காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே
தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்
சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்
ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்
ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி
என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே
நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்
புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் காதலி.

பெண்னே..!

பெண்னே..!
உன் அழகில்
இயற்கையே குழம்பிப் போய்விட
இதுவரை பார்த்திருந்த நான்
என்வாகி இருப்பேன்
ஒரு முறை எண்ணிப்பாரடி..?

எப்போது நீ நிஜமாய் என் வாழ்வில் வருவாய்........!!!!

கனவாய் என் மனதில் வந்தாய்!
கவிதையாய் என் நாவில் வந்தாய்!
ஓவியமாய் என் விரலில் வந்தாய் !
எப்போது நீ.....!!
நிஜமாய் என் வாழ்வில் வருவாய்........!!!!

நான் இருப்பேன் இங்கே................

உனக்கும் எனக்கும் இருப்பது
இங்கே எவருக்கும் புரியாது
எதை நான் சொல்லி
எனை நான் காட்ட

எட்டாத தொலைவோடு நீயாம்
தரைமீது இலையாக நானாம்
யுகம் கடந்தாலும் முடியாதாம்
ஆராய்ச்சி முடிவென்று
இதை தான் தந்தார்கள்
பேதைகள் இவர்கள்

புன்னகைத்து கொண்டவன் நான்
பதில் சொல்ல துணிந்தேன்

“ நீ வந்த திசை பார்த்து
நான் விழி திறந்தேன்
நீ போகும் வழி தானே
நான் போ...கும் வழி என்பேன்
நீ மறையும் இடம் பார்த்தே
நான் மடிந்து போவேன் ”

அந்த ஒரு நாள் உன்னோடு
எனக்கு போதும் - அது
மறு நாள் நீ வரும் வரை
மொட்டுக்களாய் மீண்டும்
நான் இருப்பேன் இங்கே

அப்போதாவது நீ என்னைக் காதலி......

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் காதலி......

மன்னித்துவிடு.....

மன்னித்துவிடு.....
நான் உன்னை
மறக்க
மறந்துவிட்டேன்.....!

அன்பே!!!

என் தோள் மீது சாய்ந்து
என்றோ தோலைந்த காதலை
எண்ணி வாடுகிராயே!
இன்றும் உன் அருகில்
தோலையாத காதலுடன்
காத்திருக்கும் என் கண்கள்
தெரிய வில்லையா?????

கேட்டுப்பார் !!!!!!!!!!

என் நெஞ்சைக் கேட்டுப்பார்
உன் காதல் சொல்லுமே.
என் கண்ணீரைக் கேட்டுப்பார்
உன் காயம் சொல்லுமே

என் நிகழ்காலம்.

கடலோடு மழை வரும்
அது மழைக் காலம்
என் விழியோடு கண்ணீர் வரும்
அது உன் நினைவுக்காலம்
இதுவே என் நிகழ்காலம்.

கனவில் நீ..

கனவில் நீ..
வருவாய் என
கண் உறங்க ஆசைப்பட்டேன்.
தூக்கம் வரவில்லை.
உன் நினைவுகளால்..........!!

அன்பே !!

நான் உன் உயிரான நாள் முதல்
நான் உணர்கிரேன் காற்றில் மிதப்பதாய்!
என் எடை நான் உணராதது
என்னை நீ சுமப்பதாலா???

வலி

காலத்தின் கைகளில் உண்டாம்
வலி தனை போக்கும் மாத்திரை

புரிய வில்லை எனக்கு - என்
வலி இன்னும் என் மனதில்

வலிகளோடு வாழ்வது தான்
வாழ்க்கை என்றால்
எற்கத்தான்
வேண்டும் என்றால்
ஏற்று கொள்வேன் - உன்போல்
ஒரு கை அதை
துடைக்க வரும் போது

புரியாத உறவு
இது அறிந்தவர்கள்
புரிந்து கொள்வார்
வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே
புரிந்து கொள்ளும்
புரிந்தவள் நீ என்பதாள்
கை கொடுத்தாய் - இன்று
கவி கொடுத்தாய்
தொலைத்தவிட மாட்டேன்
புரியாத உன் உறவை

இது வலிகள் தந்த
வார்த்தைகள் கற்பனைகளில்
வருவதில்லை புரிந்து கொள்......

இனியவளே!

இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட தோழியே!
என் மீது காதல் உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை சுமந்தபடி துடிக்கும்
இதயத்திற்கு நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில் என்னை மனிதனாகவும்,
பைத்தியமாகவும் மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே...!

மறக்க வேண்டுமென்று.....

பாதி நேரம் உன்னை
மறக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
மீதி நேரத்தில்
உன்னை மறக்க முடியாமல்................

மழை போல தான் நீயும்....

மழை போல தான் நீயும்
சில நேரம் தவிக்க விடுகிறாய்
சில நேரம் மூழ்கடிக்கிறாய்

உந்தன் பெயரை....

கவிதை வேண்டு மென பேனா தூக்கினேன்
கைகள் தானாய் கிறுக்கியது
உந்தன் பெயரை....

நினைவில் தீயாய் நீ....

நினைவில் தீயாய் நீ
உருகுகிறேன் நான் மெழுகாய்.....

எதிரினில் தெரிகிறாய்...

கண்ணை மூடும் போது
மட்டும் இல்லை
கண்ணை திறந்திருக்கும் போதும்
நீ மட்டும் தான்
எதிரினில் தெரிகிறாய்....

இது ஏனோ ?

இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்

உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்

இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்

எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை சொல்லிச் சொல்லியே
கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஏன் என் இதயம் உடைத்தாய் ? - WHY DID YOU BREAK MY HEART???

உன்னையே உயிராக
எண்ணிய என் மனம் தெளிந்துவிட்டது
இன்று உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....
ஆனால்......

உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....
எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு
நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது
ஒரு பொய் நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம்
ஒரு கேள்வி கேட்கிறது
நீ என்னை விரும்பாவிடிலும்
நான் உடைந்திருக்கமாட்டேன் இன்று....
ஆனால்....

நீ ஏன் விரும்புவது போல் நடித்து
ஏமாற்றி என்னை உடைத்தாய், வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன்
நிறுத்தாமல் உன் மெளனத்தால்
வதைத்துக்கொண்டு இருக்கிறாய் ????

தடயம்....

நீ வந்து போன
தடமெல்லாம் அழிச்சிடத்தான்
நெனச்சிருந்தேன்...
நீ வந்த தடமிருக்கு...
போன தடமில்லையே...

ஒற்றைரோஜா

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா

என் காதல் சொல்ல நேரம் இல்லை

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே ...உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

ஏய் ஹாய் எ
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

சரணம் 1
காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
ஹ்ம்ம் ..ஹீ

சரணம் 2

Thursday, April 1, 2010

பிரிதுயர்

வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?



தேவை வதை......

தேவதைகள் என்னும் சொல்லை வடமொழிச் சொல்லென்று
பல நாட்கள் பயன்படுத்த தயங்கி
நின்றேன்.....

நீ பேசும் மொழியை கேட்ட
பின்தான்........தேவை வதை
என்று...உளறிக் கொண்டே
தேவதை என்ற தமிழ்ச்சொல்லை
கண்டுபிடித்தேன்...........

 

விண்ணை தாண்டி வருவாயா?

என் பிரிவுக்கும், தனித்த இரவுக்கும் பொருள்
கொடுத்த காதலை கொடுத்த நீ
என்னோடு இல்லை இன்று தோழி....

நான் கண்ட பொருளை, உனை கண் கொண்டு
கண்டு உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன்..
என்னை தாண்டி என்னுள் வந்த நீ
விண்ணை தாண்டி வருவாயா?

காதல் ஒரு வழி

கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி


நாளைக்கு நான் காண வருவாளோ.....

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள......் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ 
வழியோரம் விழி வைக்கிறேன்.......



விடியாத இரவு...

வேறென்ன செய்ய
இரவும் பகலும்
மாறி மாறி
உன்னை நினைவூட்ட..

நீ சிரித்த பொது அழகிய நிலவும்
தன்னை மறந்து
விழுந்து விடலாம்
சிவந்த உன் கன்னங்கள்
சூரிய குடும்பத்தில்
ஒரு கடைக்குட்டி போல...

நானோ உன் போல அல்ல
என்னிடம் அடிமைகள் என
எவரும் இல்லை
உன்னை போல...

சிதறிய நீர்த்துளிகளை போல
முத்துக்கள் பரப்பிய
உன் சிரிப்புகளாய்

உலகமே உன் கையில்
மையம் கொள்ள
நீயோ என் விழிகளுக்குள்
தங்கிக்கிடக்கிறாய்...

உன்னால் விடியாத இரவும்
விடிந்த பகலுமாய்
உலகமே உன்னைத்தேடி
அலையை
அவர்களிடம் பதில் கூற
என்னிடம் மொழி இல்லை...

கண்களை திறந்து
உன்னை தாரை வார்க்க
வழிகளும் இல்லை
உன்னை நான் சிறை வைக்க
என்னை நீ வாரி எடுத்து விட்டாய்
உன் மனச்சிறையில்...

வழிகளும் புரியவில்லை
வரிகளும் தெரியவில்லை
கால்கள் மறந்து என்னைத்தேட
உன் கண்கள் மட்டுமே என்
வழிகாட்டியானதே...




நிஜம் உந்தன் காதலென்றால்....

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வ...ொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்  
நிஜம் உந்தன் காதலென்றால்


புன்னகை..........

புரிந்து
கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தானாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை !!

முதல் முத்தம்.!
















மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்
முதல் முத்தமே…

அர்த்தம் புரிந்தவர்களுக்கு மட்டும்.


காதல் புன்னகை

ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.

அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது

தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.

எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.

ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.

ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.

எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.

நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.


நான் ஏன்...

காலம் காலமாய்..
இரவு பகலாய்...
பகலும் இரவுமாய்...
நிழலிலும் நிசத்திலும்...
இந்த பூவைப் போல்...
பூவை உனக்காக காத்திருக்கின்றேன்...

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு.....

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக்... காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் ...

மறக்கத் தெரியவில்லை எனது காதலை.....

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...

காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னை சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காக பாட இசை கொண்டு வந்தேன்
மெ...ளனங்கள் பரிசாகத் தந்தேன் ..

செந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்...காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...

உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தம் இல்லை...
கடல் நீலம் கூட கரைந்தோடி போகும்
என் அன்பில் மாற்றம் இல்லை..
தோகம் தீயோடு வாடும் போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே

Wednesday, March 31, 2010

நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்....

விக்கல் எடுக்கின்றது...!
தண்ணீர் குடிக்க மறுக்கிறேன்...!
ஏனென்றால் நினைப்பது நீ என்றால்
நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்.....

உன்னை நான் விரும்பியிருந்தேன்

உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்

என் வாழ்வின் நியங்கள்.

மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம் காதல்
நினைவுகளையும் மறந்துவிட
அது என்ன நினைவுகளா? இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.

நீ விரும்பும் இதயம்

நீ விரும்பும் இதயம்
ஒரு நாள் உன்னை
தவிக்கவிட்டு செல்லும்
போது நினைத்துக்கொள்....
உன்னை விரும்பிய ஒரு
இதயத்தை நீ "என்றோ"
தவிக்க விட்டு இருக்கிறாய் என்று...........

என் வாழ்க்கைதுணை என்று

என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்.. ஓ.!
இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான்
என் வாழ்க்கைதுணை என்று

நீ இல்லததால்....

அன்று கண்ணீர் கூட சுகமானது,
துடைக்க நீ இருந்ததால்,
இன்று சிரிப்பு கூட வேதனையானது,
சேர்ந்து சிரிக்க நீ இல்லததால்

நீ கரைந்து விட மாட்டாயா?

உனது கண்கள் கலங்கிய பின்பு தான்...
எனது கண்களில் தூசி விழுந்து
இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.....
என்ன ஆனாலும் கண்கலங்கேன்....
கண்களுக்குள் இருக்கும் நீ கரைந்து விட மாட்டாயா?

ஒப்பிட முடியவில்லை

உயிருடன் கூட ஒப்பிட முடியவில்லை
உன்னை”ஏன், என்றால்“
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்”

கேட்பது நியாயமா?...

என் முகவரி நீ என்று நான் சொன்னால்,...
நிரந்தர முகவரியா, தற்காலிக முகவரியா
என்று கேட்பது நியாயமா?...

கண்ணீரை வர வைக்கிறாய்.!!

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருகிறேன்.
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்து கொண்டு
கண்களில் கண்ணீரை வர வைக்கிறாய்.!!

கலைந்து போன காதால்

கலைந்து போன காதால்
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்

நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்

உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........

உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது

உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......

பிரேமம் தானடி....

உன்னோடு நடைபயில,
உன் தோளில் தலைசாய,
உன் தலையை கோதி விட
என்று என்னுள் எத்தனையோ
ஆயிரம் ஆசைகள்...
அத்தனைக்கும் காரணம்
உன்னில் நான் வைத்திருக்கும்
பிரேமம் தானடி....

கலக்கமாய் இருக்கின்றது....

உன் மீதான காதலே
அளவுக்காதிகமாய் கோபமாய் வருகின்றது...
ஆனால், அந்தக் கோபமே உன்னிடம்
இருந்து என்னைப் பிரித்துவிடுமோ என்று
கலக்கமாய் இருக்கின்றது....

மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி செலுத்த நீ
என் கல்லறைக்கு வந்தாய் உனக்கு தெரியாது..
நான் கல்லறைக்குள் இருப்பதற்கு
காரணமே உன் மௌனம் தான் என்று....!

ஒரு தொலைவில்

நீ எனக்கு மட்டும் என்று
உரிமை கொண்டாடிய சந்தோஷம்
நீ என்னில் அக்கறை காட்டிய போது
என்னவன் என்ற மகிழ்ச்சி

நடந்தவை எல்லாம் நேற்றுப் போல
இன்றோ நான் ஒரு தொலைவில்
நீ ஒரு தொலைவில்

ஒரு ரோஐாவின் வேதனை:-

காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட காதலிக்க
தெரிந்த ஆணின்
கல்லறையில் இருப்பது மேல்...!!!

குரங்கில்லை...

மரத்துக்கு மரம் தாவ
நான் ஒன்றும் குரங்கில்லை....
மனதை விட்டு மனம் தாவ
மனம் ஒன்றும் குரங்குமில்லை...

உன் பேரை சொல்லும் போதே

உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எ......ண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்

என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிரஎன் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லைபெண்ணே பெண்ணே

காதல் என்று ஒரு வார்த்தை

எப்போது சொல்லிக்கொள்வாய்?
என்னை நீ காதலிப்பதாய்!!!!
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வார்த்தை
எனக்குள் நீ விதைத்தால்....!!!!!

நினைப்பதற்கு பல நினைவுகள்

நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் - உன்
நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை...!!!!

உலகை புரிந்து நட.........

சதியால் எமை பிரிக்க பலபேர்.......
விதியால் எமை இணைக்க சிலபேர்.
உள்ளத்தாலே உணர்ந்து நட..
உலகை புரிந்து நட.........

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அண......ைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லைஅ
ந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலைஅ
வள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

புரியவில்லை எனக்கு..

என் மெளனங்கனள
எல்லாம் புரிந்து கொண்ட உன்னால்
என் மனதை மட்டும் ஏன்
புரிந்து கொள்ள முடியவில்லை.
அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறாயா?
புரியவில்லை எனக்கு..

என் தெரிவா?? உன் தெரிவா??

அன்று
நீ முரண்பட்டு நின்றாய் என் காதல் பிழையென்று....
இன்று அதே நீ முரண்பட்டு
நிற்கின்றாய் உன் தெரிவு பிழையென்று...
இடையில் இடம்பெற்ற முரண்பாடு என்
தெரிவா?? உன் தெரிவா??

சொல்ல வேண்டுமென்கிற தவிப்பில்தான் வருகிறேன்...

சொல்ல வேண்டுமென்கிற
தவிப்பில்தான் வருகிறேன்.

ஒவ்வொரு முறையும்
சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.

சிலவற்றைச்
சொல்லாமலே
புரிந்துகொள்ள வேண்டுமென்பதை
யாருனக்குச் சொல்லித்தருவது?

உன்னை மறந்திட என்னிதையம் நினைக்குதம்மா...

உன்னை மறந்திட
என்னிதையம் நினைக்குதம்மா...
மதிகெட்ட மடநெஞ்சம்
உன்னினைவை துறக்குதம்மா...

நெஞ்சில் கூடுகட்டி
பொத்திவைத்த நினைவெல்லாம்...
கூட்டை உடைத்து
வெளியேறி போகுதம்மா...

நிலவு தேய்ந்திடலாம்
நினைவுகள் தேய்ந்திடுமா?
காதல் தந்த கனவுகள்
கண்ணை விட்டு போய்விடுமா?

கடைசி மூச்சிவரை
காத்திருக்க போவதாய்...
எழுதிவைத்த கவிதையெல்லாம்
பொய்யாகி போய்விடுமா?

உன்னோடு வாழ்ந்திட
வழியில்லை என்றபின்னும்...
உன் நினைவோடு வாழ்வதாய்
நெஞ்சிக்கு சொல்லிவைத்தேன்...

நினைவை சுமந்துவாழ
நெஞ்சம் மறுக்குதம்மா...
உன்னை மறக்கச்சொல்லி
என்னை வருத்துதம்மா...

காலம் தன் வாளெடுத்து
நினைவுகளை வேட்டையாட...
காதலின் கால்தடம்
ஒவ்வொன்றாய் மறையுதம்மா...

நீ விட்டுச்சென்ற கால்தடத்தில்
நடைபழகி பார்த்ததும்...
தொட்டுச்சென்ற பொருளையெல்லாம்
சேர்த்துவைத்த நாட்களும்...

காலமெல்லாம் என் நெஞ்சில்
நிலைத்திருக்க கூடாத...
நினைவோடு வாழ்வதெல்லாம்
நிஜவாழ்வில் நடக்காத...

மறக்கத்தான் வேண்டுமென்று
விதியொன்று இருக்குமென்றால்...
அன்றே நான் இறப்பதும்
விதியென்று செய்திடுவேன்...

வாழும்வரை உந்தன்
நினைவுகள் சுமந்திருப்பேன்...
என் கடைசி கவிதையிலும்
உன் பேரெழுதி வைத்திருப்பேன்...

புரியவில்லை....

என் பாதையின் தூரம் தெரியவில்லை...
முடிவு என்பது என்னவென்றும் புரியவில்லை....

நீ எனக்கு சொந்தம் இல்லை

நீ எனக்கு சொந்தம் இல்லை
என்று சொன்ன போது
மனசு வெந்து போச்சு.
என் நிலலு கூட
இப்ப இரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சு

பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!

நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!

இறந்து விடுகிறேன்

முடிந்த அளவு
உன்னை மறந்து
விடமுயச்சிக்கிறேன்
முடியவில்லை என்றால்
இறந்து விடுகிறேன்

எதுவாக என்றாலும்......

உன் வரவிற்காய் என் இரு விழிகள்
உன் அன்பிற்காய் என் இதயம்
உனக்காய் நான்,
நீ என் தோழியா, காதலியா?
என்றென்றும் நீ வேண்டும்
அது எதுவாக என்றாலும்..........................

வருகிறாயா?

உன் நினைவுகளோடு
தண்டவாளத்தில் கிடக்கிறேன்
நீ......!!!
நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?

என்னோடு நீயிருந்தால்.........

என்னோடு நீயிருந்தால் வானம் கூட என் கைவசம்..............
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்..............
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன் ..............
அன்பே உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ...

Sunday, February 28, 2010

சபிக்கப்பட்டவன்....

நான் சபிக்கப்பட்டவன்...,
உன்னைக் காதலிக்க வேண்டும் என்று
விதியால் சபிக்கப்பட்டவன்....

பொறுமையானவள்டி...

உன் செல்லக் கோபங்களை
ரசிப்பதற்காகவே உன்னை
செல்லமாய் சீண்டுகின்றேன்....
கோபத்தில் கூட நீ
பொறுமையானவள்டி...

கோபம் வருகிறதில்லையே?..

என்னோடு நீ முரண்படுவாய்...
அது எனக்கு தெரியும்
என் கோபத்தை சீண்டுவதற்காய்...
நீ என்ன செய்தாலும்
உன்னில் எனக்கு கோபம் வருகிறதில்லையே?....

உண்மைதானே?......

என்னதான் நீ
என்னுடன் சண்டை பிடித்தாலும்
உன்னை சமாதானம் செய்ய
ஓரளவு தன்னும்
நான் அறிந்து வைத்திருக்கின்றேன்
என்பது உண்மைதானே?......

வலிக்கும்...

காதல்
என்பது தீப்பெட்டியும்,
தீக்குச்சியும் மாதிரி...
உரசினால்
தீக்குச்சிக்கும் வலிக்கும்,
தீப்பெட்டிக்கும் வலிக்கும்...

என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!

நான் உன்னை விட்டு விலகிடுவேனோ என்று நீயும்,
நீ என்னை விட்டு விலகிடுவாயோ என்று நானும்
கவலையுறுவது விடுத்து,
நம்பிக்கை என்னும் உலகத்தில்
நாம் புதிதாய் வாழ்வோம்...
என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!

Tuesday, February 23, 2010

உன்னை நான் விரும்பியிருந்தேன்

உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்

Monday, February 22, 2010

என்னைபோலவே .

இப்போதெல்லாம் உன்னை
பற்றி கவிதை எழுத தோணவில்லை .
நீ வார்த்தைகளுக்கு அப்பால்
பட்டவள் என்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .

உன் கூந்தல் காட்டுக்குள் சிக்கி கொண்டு
வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன .
என்னைபோலவே .

தவிக்கின்றேன் நான்.......

பெண்னே எனக்கும்
காதலிக்கதெரியும் -அதுவும்
அன்பாய் காதலிக்கதெரியும் ........

உன்னை காதலிக்கவும் -என்
அசைவுக்கு ஆடவைக்கவும் -எனக்கு
தெரியும்......

உன் கண்ணீரில் -எனக்கு
காதல்கவிதை எழுதி துதூ விட -உன்னை
என்னால் பணிக்கவும் முடியும்......

எனக்காக நீ -இரவெல்லாம் -விழி
மூடாமல் காத்திருக்கவும் -என்னால்
ஏவ முடியும் .........

உன் வாயால் நீ எனக்கு -அடிமை
என்று ஒப்புதலும் -என்னால்
வாங்க முடியும்...............

ஆனால் நீ யார்? எங்கே
இருக்கின்றாய் என்று மட்டும்
தெரியாமல் தவிக்கின்றேன் நான்................

என்னை நேசி..

எதை சொல்லுவது
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..

உனக்கு காதலை புரியவைப்பேன்...

வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...

உன் நினைவில் வாழ்கிறேன்...

உள்ளம் கையில்
உன் பெயரை எழுது
உற்றுப் பார்த்தேன்
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தை
சற்றுக் கேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள்
என்பதை மற்ந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்
இன்பத்தில் வாழ்கிறேன்...

நம் இதயங்கள்!

உனைக் கண்ட அந்நாளில்
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
“காதல்” என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
“வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்” சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!

கண்டுகெண்டது காதல்

என்னை நானாகத்
தொலைத்த இடத்தில்
தன்னை தானாக
கண்டெடுத்துக்
கொண்டது காதல்!

என்ன கேள்வி வரும்?

கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது
- ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
– ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
– ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
– ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?

வீட்டு வாசலும்

பாதையெங்கும் பார்வைகளை
விரித்து வைத்துக் காத்திருக்கின்றன
என் கண்கள்.
என் கண்கள் மட்டுமா?
உன் வருகைக்காக ஒவ்வொரு வீட்டு வாசலும்
கோலங்களின் மூலம் தங்களை
அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன

பிறகெப்படிக் காதலிப்பது?

குழந்தையாய் நீயிருக்கும்
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்…”அழகி” என்று சொல்லி சொல்லியே
அழகி, உன்னைப் பேரழகியாக்கிட
நான் செய்யும் முயற்சிகளும்…
நீ சும்மா சொல்லும்
“பேச மாட்டேன் போ” க்களுக்கெல்லாம்
ஒரு குழந்தையைப் போல
உன்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதும்…
“ம்ம்ம். நல்லா இருக்கு!”
நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
நான் கவிதைகள் பொறுக்குவதும்…
உன் மௌன விரதநாட்களிலும் கூட
தொலைபேசியில் உன்னையழைத்து
நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்…
நம் முதுமையில் வாசித்து மகிழ
இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்…
…எல்லாமே இவர்களுக்குப்
பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!
இருந்து விட்டுப் போகட்டும்…
பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?

எப்படி வீழ்த்துவது?

ஊரெல்லாம் ரவுடிகளை
சுட்டு வீழ்த்துகிறது
காவல்துறை.
பார்வையால் என்னை
தினம் தினம் அடிக்கும்
காதல் ரவுடியே உன்னை
எப்படி வீழ்த்துவது?

உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...

புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொறுங்கி போகிறேன்...
சில சமயங்களில்...

கண்ணீர் வடிக்கிறேன்!

உள்ளம் தன்னில் உள்ளதை எல்லாம்
உன்னிடம் சொல்லத் துடிக்கிறேன்!
நீ-
ஓதுங்கிப் போகும் ஒவ்வொரு கணமும்
கடலாய்க் கண்ணீர் வடிக்கிறேன்!

பல இன்னலுக்கு பின்.....

அன்பே பல இன்னலுக்கு பின்
ஒன்றாக இனைந்தோம் ஒரே மணமேடையில்
நீ மணப்பெண்ணாக ?
நான் மப்பிள்ளை தோழனாக ?

நீ ....! நீதான்

மலர்களில்
வண்டுகளின் எச்சில்!!!
நிலவில்
மனிதனின் கால்தடங்கள்!!!
தென்றலில்
பலரின் மூச்சுக்காற்று!!!
களங்கப்பட்ட உவமைகளில்
உன்னை கவிதையாக்க
விரும்பவில்லை
நீ ....! நீதான்

மெளனமாக......

கல்லால் அடித்து கூட
உன்னை காயப்படுத்த முடியும்
ஆனால்
நீ சொன்ன வார்த்தையை விட
அது பெரிதாகாது

கத்தியால் குத்தி கூட உன்னை
இரத்தம் சிந்த வைக்க முடியும்
ஆனால்
நீ காட்டிய மெளனத்தை விட
அது பெரிதாகாது.

நீ சொல்லும் வார்த்தையை
மெளனத்தின் மூலம் அறிய
மெளன மொழியை கற்கிறேன்
மெளனமாக

அவள் காதல்!

எனக்கு தெரிந்த கவிதை அவள் பெயர்!
எனக்கு தெரிந்த ஓவியம் அவள் முகம்!
எனக்கு தெரிந்த கலை அவள் சிரிப்பு!
எனக்கு கிடைத்த பரிசு அவள் காதல்!

யாருக்கு யார் ஒளி தந்தது ?

இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?

நீயாக!!!

என் கண்களில் நீரில்லை
எழும்பி கீழே வருமுன்னர்
இதயதாபத்தால் தீயாக
எரிக்கப்படது ஆவியாக

என் நாவில் சொல்லில்லை
சொல்லிவிட எண்ணுமுன்னர்
நெஞ்சுத் தணல் நெருப்பாக
நீக்கிவிட்டது மௌனமாக

என் காலில் இயக்கமில்லை
எழுந்து நடக்க முயலுமுன்னர்
உள்ளத்து உஷ்ணம் உருக்கிவிட
ஊனமுற்றது உண்மையாக

என் இதழில் சிரிப்பில்லை
மெள்ள விரிந்து மலருமுன்னர்
எண்ண சோகம் இயல்பாய் வாட்ட
மங்கி மறைந்தது மந்தமாக

என் நெஞ்சில் நினைவில்லை
எங்கும் நீயே நிறைந்திருக்க
எண்ணமாய் எழும்பி விரியுமுன்னர்
இதயம் நிறைந்தது நீயாக!!!

மறந்து விடு என்றார்கள்.

உன்னை மறந்து விடு என்றார்கள்
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும் மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!

Sunday, February 21, 2010

சுட்ட கவிதையா?

சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?

புரியவில்லை !!!!!

காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....

என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...

சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...

என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...

எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது?

என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

Friday, February 19, 2010

ஒரு தலைக் காதல்

பெண்ணே…உனைக்கண்ட நாள்
முதல்பித்துப்பிடித்த பித்தனானேன்
உன் தரிசனத்துக்காய்தவம் கிடந்தேன்
உன் பார்வைக்காய் வேள்வி கொண்டேன்
உன் காதலுக்காய்யாகம் செய்தேன்..
அத்தனையும் வீணாக்குவது போல் இன்று
உனக்கு திருமண நாள் ஏன் என் அருமை புரிய வில்லை
உனக்கு உன்னை நான் காதலித்தது
உன் ஆஸ்த்திக்காக அல்ல
உன் அந்தஸ்துக்காகவும் அல்ல
உன் அழகுக்காகவுமல்ல
உன் குழந்தை போன்ற குணத்துக்காக மட்டும்தான் ஆனால்…..
நீ நிரூபித்திருக்கிறாய்ராடசத மனமுள்ளவள் என்று
நீ நீடூழி வாழவாழ்த்துகிறேன்

கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!
எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!

உன் அன்பைப் பெறுவதற்காய் சில ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய் தவமிருந்து!!

காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம் வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும் அரக்கன்!!

காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல் விழுதாகிவிட்டதடி!!

உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

உன்னோடு சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என் அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!

இந்த காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு

அன்பென்றே பெயர்

என் மீது படர்ந்திருக்கும்
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!

அர்த்தங்கள் நிறைந்த மௌனம்

எத்தனை தடவைதான் என்
பார்வை அம்புகள்
உன் மேல்....
உன் மௌனத்தைக்
கலைப்பதற்கு

உன் மௌனம் என்னைக்
கொல்கிறதா
கொள்ளையடிக்கிறதா.........???
இன்னும் புரியாமல் நான்
உன் பின்னால்

என்னை என்றும் காதலிப்பதை
மௌனமாக சொல்கிறாயா
இல்லை
காதல் மௌனமானது என்கிறாயா ?????

நம் காதலின் சக்தி
பேசும் ஒலிச்சக்திகளால்
வீணாகி விடாமல்
காதலுக்கு சக்தி சேமிப்பா ??
சொல் மௌனமாய்
ஒரு வார்த்தை

வார்த்தைகளுக்காய் எத்தனையோ
கவிஞர்கள் காத்திருப்பு
ஆனால்
நீ
எத்தனையோ
கவிதைகளை பிரசவிக்கிறாய்
அழகிய மௌனத்தால்....


நிலவைப் பார்த்ததும்
நான் ரசிப்பது
ஒளிக்கீற்றுக்களை அல்ல
அதன் மௌனத்தை தானடி
அதுதான்...
உன் மௌனத்தின் ஆழத்தில்
இன்னும்
நான்
முத்தெடுக்கத் தவிப்பது

உன் மௌனத்துக்குள்
மூழ்கிவிட்டால் போதுமடி
காதலின் பாதி வாழ்க்கையை
வாழ்ந்துடுவேன்
மீதி வாழ்கையைப் பற்றியே
என் கவலை..


நீ
மௌனமாகவே இருந்துவிடு
இல்லையேல்
பிள்ளையார் பிடிக்கப்போய்
குரங்கான கதையாக
என் காதல் ஆகிவிடும்
என்ற பயம் எனக்கு.......

போய் வா.....

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்

உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்

உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது

கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்லை
ஆறுதல் சொல்ல எனக்கு

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை
சேர்த்துக்கொண்டு

சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே
புன்னகைத்துக்கொள்
சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம்
என்னிடம் இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்

உன் திருமுகம்
என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை
என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....

ஒரு பொய்யாவது சொல்

நித்தம் மௌனம் கலைத்து
சத்தம் போட்ட பூக்கள்
மரணித்துவிட்டதென எண்ணும்
விழிகளில் காதல தீ மூட்டிய
பூவே...........
உன்னால் உதிர்ந்த சருகுகளாலான
என்மனதை சாம்பலாக்கவாவது
உதிர்த்துவிடு
உன் புன்னகையால் ஒரு வார்த்தை

காதலி .........

என் முகவரி நீ
கவிதையின்
முதல்வரியும்
நீ......


உறவுக்கு வழிவகுத்த நீ
காதல் வளர்த்த தீ .... !
இனிக்கும் இத்துன்ப நோய்க்கு
மருந்தும் நீ ....


பத்துவிரல் கோர்க்க
அத்துவிதமாய் சேரும்
இன்பத்தூறல் கவிதைக்கு
கற்பனையும் நீ ....


என் விழிகளின் வலி உணர்ந்து
கண்ணீரைச் சொரிந்தவலும் நீயே
விழி மூட வலி கொடுப்பவளும் நீயே
உன் ஈரவிழிப்பார்வை
கற்றுத்தந்தது
காதல் வாழ்வை...

என் முதல் காதல்..

கற்பனை உலகை எட்டும் போது
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது கவிதை
வடிவம் பெற்றது

உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச் சுவடுகள்..
உன் கண் சிமிட்டும் சந்தத்தில்
என் மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் அன்றுதான்
நான் தடுமாறிய முதல் தினம்

தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என் நெஞ்சினில்
நீ ஒரு
மொனாலிசாவாக....

உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....

நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
இன்னும் என் மனசில்
மெகா சீரியலாக.....

காதல் வலி

நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல

இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல

தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே

இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே

ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு

நீ வருவாய் என........

காதல் வானில்
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....

கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்

மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....

"நான் உன்னை விரும்பினேன்"

நீ என்னை விரும்ப வேண்டாம்
"நான் உன்னை விரும்பினேன்"
என்பதை மட்டும் அறிந்து விடு

"கசப்பான" உண்மை

மீண்டும் நீ சொன்னதை நினைவு படுத்துகிறேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...
அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்

என் காதல் மனசு

எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு

தொலைத்தபின்....

வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன் காதலி
என்றஆயுதத்தை தொலைத்தபின்

கேக்கிறதா

உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா

என் காதலை நிருபித்திருக்கலாம்

உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்

Monday, January 18, 2010

காத்திருப்பேன்!

உனக்காக நான்
காத்திருக்கா விட்டாலும்
நம் காதலுக்காக வாழ் நாள்
முழுவதும் காத்திருப்பேன்
என் உயிர் காதலே!

உள்ளங்கையில் நிழற்படமாய் நீ...!

நம்மிருவரின் அன்பை
மொத்தமாய் வெளிக்காட்டிய
அந்த ஒருசில நிமிடங்களின்
முத்தபரிமாற்ற பரிவர்த்தனையை
வெட்ட வெளிச்சமாய்
என்னுள் படம்பிடித்து காட்டுகிறது
குளித்துத் துவட்டிய பின்னும்
உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓரிரு நீர்த்துளியையொத்த
உன் நினைவுகளை
தேக்கிவைத்திருக்கிறேன்
உள்ளங்கையில்
நிழற்படமாய் நீ...!

கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள்

கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள் தொலைத்து...
உன் நினைவுகளால் விழித்திருந்த இரவுகள்...
சுவாசப்பை முழுதும் நினைவுகள் நிரப்பி...
மூச்சு திணறிய ராத்திரி தருணங்கள்...

அறிந்தும் அறியாமலும்

பக்கத்தில் இருந்தும்
பார்க்காமல் இருக்கிறாய்
கேட்கத் தெரிந்தும்
கேட்காமல் இருக்கிறாய்
பேசத் தெரிந்தும்
பேசாமல் இருக்கிறாய்
என் நிலை தெரிந்தும்
தெரியாததுபோல் இருக்கிறாய்
என் மனம் அறிந்தும்
மௌனமாய் இருக்கிறாய்
என் இந்த உள்ளக் குமுறல் தெரிந்தும்
தெரியாதது போல் இருக்க உன்னால் முடியும் !
அதற்காய் நானும் இறப்பேன் ஒரு நாள் ...
என்னை நீ அறிய, முழுவதுமாக ...
மௌனம் ஒன்றே கொண்டு
அழும் என் நிலை, ஏனோ மாற்றார் அறியார்
நீயுமா?
ஊமையின் குமுறலும் சத்தமாய்
அவர்களுக்கு கேட்க,
அழுகிறேன் என் மௌனத்தோடு யாரும் அறியாமல்.
வருவாய் ஒரு நாள் என் அருகில்
என்ற நம்பிக்கையோடு
வழி(லி) மேல் விழி வைத்து...

இதுதான் நரக வேதனையோ...?

நான் ஆசையாசையாய்
அவளிடம் பேசும்போது
அவளோ இடைமறித்து
இன்னொருவனைப் பற்றி
என்னிடம் ஆசையாசையாய்
பேசிக் கொண்டிருக்கிறாள்
இதுதான் நரக வேதனையோ...?

எப்படியென்று ...!

உரையாடும் நேரங்களில்
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ...!

கடந்து செல்...!

உன்னிடம் சொல்லநினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ போகிற பாதையில்
கீழே சிதறி கிடக்கும்
கொஞ்சம் அதை மிதிக்காமல்
கடந்து செல்...!

உன்மேல்...!

நான் ஆசைப்பட்ட
எல்லாமே கிடைத்ததில்லை
ஆனால் ஆசைப்படாமலே
எதுவும் கிடைப்பதில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்னால்
ஆசைப்படுகிறேன்
உன்மேல்...!

இருப்பது எந்த இடம்.

கனவுப் பாதையென்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தான்
அழிவுப்பாதையென்று
அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்
கவிதைப் பாதையென்பதும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எல்லாப்பதையும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எந்தப் பாதையாய்
இருந்தால் என்ன
ஏதோ ஓர்
அழிவுப் பாதை
நீண்ட
நெடும்பாதை
நடக்க நடக்க மாயமாய்
நீளும் பாதை
எப்பொழுது
வந்து சேரும் அத்தம்
இப்பொழுது
இருப்பது எந்த இடம்.

Sunday, January 17, 2010

எத்தனை கவிதையும் எழுதலாம் நான்

என் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்
உறக்கத்தை விரும்புவதில்லை நான்
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்

நீ காட்டிக் கொடுக்கும் வரை

" ஏன் துடிக்கிறாய்? " என்று
இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை
நீயும் கேட்காதே என்னிடம்
" ஏன் என்னை காதலிக்கிறாய் ? " என்று
சொல்ல தெரியாது எனக்கு,
காதலிக்க மட்டும்தான் தெரியும் ......
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை

புதிய காதலி.

நான் எழுதிய அர்த்தம் வேறு.
எனது நண்பன் கூறிய பதில் வேறு.
“ஆமாம்.
எனது புதிய காதலி தான்.
“நீ” ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய காதலி தான்!”

உன் மனதோடு மட்டுமே !!!

கடலோடு கரைந்தாலும்
மழைத் துளியாய் உன் மடி மீது!
வெயிலோடு வீழ்ந்தாலும்
விடியலாய் உன் வாசலில்!
மண்ணோடு மரித்தாலும்
மண்வாசனையாய் உன் மனதோடு மட்டுமே !!!

கோடி புண்ணியம்..

என்னை ஞாபகப்படுத்தும்
எந்தபொருளையாவது
காண நேர்ந்தால் தயவுசெய்து அ
னாதையாய் விட்டுவிடாதே
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில்
போட்டுவிடு கோடி புண்ணியம் கிடைக்கும்

கவிதை...

உனக்கு யாரோ
ஒருவனின் கவிதை பிடித்ததில்
இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்னில் ஏதாவது ஒன்று
உனக்கு பிடித்ததில் கவிதையாவது
இருக்கட்டுமே என்று

நீதான்....

இப்பொழுது
எல்லாம் உன்னை
நினைக்காத போதும் கண்ணீர்வருகிறது
நீதான் என் கண்ணில் படாமல் வாழ்கிறாயே

என்னை.....

என்னை
எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை
மட்டும் பிடித்தது அதே
என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்குமட்டும்
என்னை....

மனசு..

வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன் காதலி
என்றஆயுதத்தை தொலைத்தபின்
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு

கேக்கிறதா ?

உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா

Tuesday, January 12, 2010

யார் உன்னை நினைப்பது

இரவிரவாய்
எனக்கும் என் பேனாவுக்கும் மோதல்
யார் உன்னை அதிகம் நினைப்பது என்று

கிறுக்கல்...

என் நாட்குறிப்பில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளை
எழுதித் தொலைக்காமல்
வரைந்து வைத்திருக்கின்றேன்!
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்...

கனவோ...இது நினைவோ..

கனவோ...இது நினைவோ
குழம்பினேன் நானே

நிழலோ இல்லை நிஜமோ
தொலைந்ததும் நானே

அவன் வந்தது...நான் பார்த்தது...
அவன் சிரித்தது...நான் ரசித்தது...
உண்மையா...அட இல்லையா?

யார் தான் வந்து கண்ணின் முன்னே காதல் கோலம் போட்டது
ஏன் தான் எந்தன் இதயம் இன்று இசையாய் மெல்லத் துடிக்குது

வானில் கூட சேர்ந்தே நடக்க மேகம் ஒன்று அழைத்தது
நேரில் நானும் அவனைப் பார்க்க நெஞ்சம் ஏதோ செய்தது

அவன் சொன்னது...நான் கேட்டது...
அவன் தந்தது...நான் பெற்றது...
உண்மையா... அது உண்மையா?

காதில் சொன்ன வார்த்தை ஏனோ பாதி தானே கேட்டது
மீதி கேட்க..மீண்டும் கேட்க ஏனோ மனதும் ஏங்குது

முத்தம் தந்த தடையம் கூட முகத்தைப் பார்த்துச் சிரிக்குது
மூச்சில் சேர்ந்த வெப்பம் என்னை மூர்ச்சையாக்கி விட்டது

Wednesday, January 6, 2010

உன் நினைவுகள்

இவன்
உடல் உயிரை சுமந்திருக்கும் வரையிலும்
உன்
நினைவுகள் இவனுள் நிறைந்திருக்கும்.

தழுவிஅழுகிறதே

உனது முகத்தை
எனதுஇதயம் உயிரில் எழுதியதே
உறக்கம் மறந்த விழிகள்
அதனை தழுவிஅழுகிறதே

உன் நினைவுகள்.....

எத்தனை காலகள் மிதித்தாலும்
எழுந்து நிற்கின்ற புற்களைப்போல்
காலம் எத்தனை முறை மிதித்தாலும்
எழுந்து நிற்கின்றன உன் நினைவுகள்.....

தூக்கமே வருகிறது...

எல்லோருக்கும் தூக்கம் வந்த பிறகுதான்
கனவு வரும்....
எனக்கோ உன் கனவு வந்த பிறகுதான்
தூக்கமே வருகிறது...

சொர்க்கம்தான்...

சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது
என்று சொல்பவர்கள்
சொல்லிவிட்டுப் போகட்டும்.....
எனக்கு சொல்லாத காதலே
சொர்க்கம்தான்...

எனக்கு மரணம் என்பது

என் உடலில் உயிராக ஓடிக்கொண்டிருப்பது
உன் நினைவுதான்....
எனக்கு மரணம் என்பது
உன் நினைவுப் பிரிதல்தான்....

எங்கோ இருக்கிறாய்...

நீ ஒரு தெய்வத்தைப் போல்
எங்கோ இருக்கிறாய்...
நான் ஒரு பக்தனைப் போல்
எங்கிருந்தாலும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறேன்....

தருவாயோ மீண்டும் என்னை

கண்ணீரில் உன்னைத்தேடி சருகாய்த்தான் போனேன் இன்று
உன்னைநான் கண்டநேரம் என்னை நான் இழந்தேன் இங்கு
நெஞ்செங்கும் உந்தன் நினைவே
போகாதே எந்தன் உயிரே வாழத்தான் தோன்றாதிங்கே
பார்ப்பேனோ இனிமேல் உன்னை தொலைத்தேனே உன்னில் என்னை
வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை

வாங்க முடியவில்லையே உன்னிடம்...

ஏதோ சில கவிதைகளை மட்டும் எழுதியே
சுலபமாய் ‘கவிஞன்’ என்கிற பெயரை
வாங்கிவிட்டேன்.....

ஆனால்...

எவ்வளவு காதலித்தும் அவ்வளவு சுலபமாய்
‘காதலன்’ என்கிற பெயரை
மட்டும் வாங்க முடியவில்லையே
உன்னிடம்...

ஈரமாய் மிஞ்சும்

காலங்கள் போகும்
இது கதையாகிப்போகும்
உன்னோடு வாழ்ந்த ஞாபகம்
மட்டும் நெஞ்சினில் ஈரமாய் மிஞ்சும்

வலி

வலியை
விட வலிக்கிரது
உன் நினைவுதரும் வலி

நினைக்காமல் இருக்க முடிவதில்லை

உன்னை நினைக்காமல்
இருக்க முடிவதில்லை
இரவின் விழிப்பிலும்
என் தோழில் நீ சாய்ந்திருக்கின்றாய்

மறந்து போனாய்?

இந்தப் பூமியில்
எல்லாமே உனக்கு நினைவிருக்கிறது
எப்படி உன்னை நேசித்த உள்ளத்தை
மட்டும் மறந்து போனாய்?

சின்னாபின்னமாக்கிவிட்டாயே

தேனீர் போல
சிறுகசிறுக சேர்த்தேனே
சீரூட்டிப் பார்த்தேனே
அதை சின்னாபின்னமாக்கிவிட்டாயே

வாழ வி௫ப்பமில்லை

நீ இல்லாத இவ்வுலகில் வாழ
எனக்கு வி௫ப்பமில்லை இ௫ந்தும்
உன் நினைகளைப் பிரிந்து சாகவும் முடியவில்லை
இந்த உலகத்திலி௫ந்தே அன்னியப்படுத்தப்பட்டதாய்
உணர வைக்கிறாயடி கண்ணே

Tuesday, January 5, 2010

என்றும் துனையாக.

உன் மனதில்- உன் இதயத்தில்
உன் கனவில்-உன் வாழ்வில்
யாரேனும் இருக்கலாம் -ஆனால் யாரும்
இல்லாதபோது நான் இருப்பேன் -உன் அருகில்
என்றும் துனையாக.

அதே இடத்தில்



தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்...

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?