Monday, January 18, 2010

அறிந்தும் அறியாமலும்

பக்கத்தில் இருந்தும்
பார்க்காமல் இருக்கிறாய்
கேட்கத் தெரிந்தும்
கேட்காமல் இருக்கிறாய்
பேசத் தெரிந்தும்
பேசாமல் இருக்கிறாய்
என் நிலை தெரிந்தும்
தெரியாததுபோல் இருக்கிறாய்
என் மனம் அறிந்தும்
மௌனமாய் இருக்கிறாய்
என் இந்த உள்ளக் குமுறல் தெரிந்தும்
தெரியாதது போல் இருக்க உன்னால் முடியும் !
அதற்காய் நானும் இறப்பேன் ஒரு நாள் ...
என்னை நீ அறிய, முழுவதுமாக ...
மௌனம் ஒன்றே கொண்டு
அழும் என் நிலை, ஏனோ மாற்றார் அறியார்
நீயுமா?
ஊமையின் குமுறலும் சத்தமாய்
அவர்களுக்கு கேட்க,
அழுகிறேன் என் மௌனத்தோடு யாரும் அறியாமல்.
வருவாய் ஒரு நாள் என் அருகில்
என்ற நம்பிக்கையோடு
வழி(லி) மேல் விழி வைத்து...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?