Sunday, February 28, 2010

சபிக்கப்பட்டவன்....

நான் சபிக்கப்பட்டவன்...,
உன்னைக் காதலிக்க வேண்டும் என்று
விதியால் சபிக்கப்பட்டவன்....

பொறுமையானவள்டி...

உன் செல்லக் கோபங்களை
ரசிப்பதற்காகவே உன்னை
செல்லமாய் சீண்டுகின்றேன்....
கோபத்தில் கூட நீ
பொறுமையானவள்டி...

கோபம் வருகிறதில்லையே?..

என்னோடு நீ முரண்படுவாய்...
அது எனக்கு தெரியும்
என் கோபத்தை சீண்டுவதற்காய்...
நீ என்ன செய்தாலும்
உன்னில் எனக்கு கோபம் வருகிறதில்லையே?....

உண்மைதானே?......

என்னதான் நீ
என்னுடன் சண்டை பிடித்தாலும்
உன்னை சமாதானம் செய்ய
ஓரளவு தன்னும்
நான் அறிந்து வைத்திருக்கின்றேன்
என்பது உண்மைதானே?......

வலிக்கும்...

காதல்
என்பது தீப்பெட்டியும்,
தீக்குச்சியும் மாதிரி...
உரசினால்
தீக்குச்சிக்கும் வலிக்கும்,
தீப்பெட்டிக்கும் வலிக்கும்...

என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!

நான் உன்னை விட்டு விலகிடுவேனோ என்று நீயும்,
நீ என்னை விட்டு விலகிடுவாயோ என்று நானும்
கவலையுறுவது விடுத்து,
நம்பிக்கை என்னும் உலகத்தில்
நாம் புதிதாய் வாழ்வோம்...
என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!

Tuesday, February 23, 2010

உன்னை நான் விரும்பியிருந்தேன்

உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்

Monday, February 22, 2010

என்னைபோலவே .

இப்போதெல்லாம் உன்னை
பற்றி கவிதை எழுத தோணவில்லை .
நீ வார்த்தைகளுக்கு அப்பால்
பட்டவள் என்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .

உன் கூந்தல் காட்டுக்குள் சிக்கி கொண்டு
வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன .
என்னைபோலவே .

தவிக்கின்றேன் நான்.......

பெண்னே எனக்கும்
காதலிக்கதெரியும் -அதுவும்
அன்பாய் காதலிக்கதெரியும் ........

உன்னை காதலிக்கவும் -என்
அசைவுக்கு ஆடவைக்கவும் -எனக்கு
தெரியும்......

உன் கண்ணீரில் -எனக்கு
காதல்கவிதை எழுதி துதூ விட -உன்னை
என்னால் பணிக்கவும் முடியும்......

எனக்காக நீ -இரவெல்லாம் -விழி
மூடாமல் காத்திருக்கவும் -என்னால்
ஏவ முடியும் .........

உன் வாயால் நீ எனக்கு -அடிமை
என்று ஒப்புதலும் -என்னால்
வாங்க முடியும்...............

ஆனால் நீ யார்? எங்கே
இருக்கின்றாய் என்று மட்டும்
தெரியாமல் தவிக்கின்றேன் நான்................

என்னை நேசி..

எதை சொல்லுவது
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..

உனக்கு காதலை புரியவைப்பேன்...

வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...

உன் நினைவில் வாழ்கிறேன்...

உள்ளம் கையில்
உன் பெயரை எழுது
உற்றுப் பார்த்தேன்
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தை
சற்றுக் கேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள்
என்பதை மற்ந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்
இன்பத்தில் வாழ்கிறேன்...

நம் இதயங்கள்!

உனைக் கண்ட அந்நாளில்
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
“காதல்” என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
“வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்” சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!

கண்டுகெண்டது காதல்

என்னை நானாகத்
தொலைத்த இடத்தில்
தன்னை தானாக
கண்டெடுத்துக்
கொண்டது காதல்!

என்ன கேள்வி வரும்?

கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது
- ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
– ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
– ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
– ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?

வீட்டு வாசலும்

பாதையெங்கும் பார்வைகளை
விரித்து வைத்துக் காத்திருக்கின்றன
என் கண்கள்.
என் கண்கள் மட்டுமா?
உன் வருகைக்காக ஒவ்வொரு வீட்டு வாசலும்
கோலங்களின் மூலம் தங்களை
அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன

பிறகெப்படிக் காதலிப்பது?

குழந்தையாய் நீயிருக்கும்
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்…”அழகி” என்று சொல்லி சொல்லியே
அழகி, உன்னைப் பேரழகியாக்கிட
நான் செய்யும் முயற்சிகளும்…
நீ சும்மா சொல்லும்
“பேச மாட்டேன் போ” க்களுக்கெல்லாம்
ஒரு குழந்தையைப் போல
உன்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதும்…
“ம்ம்ம். நல்லா இருக்கு!”
நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
நான் கவிதைகள் பொறுக்குவதும்…
உன் மௌன விரதநாட்களிலும் கூட
தொலைபேசியில் உன்னையழைத்து
நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்…
நம் முதுமையில் வாசித்து மகிழ
இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்…
…எல்லாமே இவர்களுக்குப்
பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!
இருந்து விட்டுப் போகட்டும்…
பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?

எப்படி வீழ்த்துவது?

ஊரெல்லாம் ரவுடிகளை
சுட்டு வீழ்த்துகிறது
காவல்துறை.
பார்வையால் என்னை
தினம் தினம் அடிக்கும்
காதல் ரவுடியே உன்னை
எப்படி வீழ்த்துவது?

உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...

புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொறுங்கி போகிறேன்...
சில சமயங்களில்...

கண்ணீர் வடிக்கிறேன்!

உள்ளம் தன்னில் உள்ளதை எல்லாம்
உன்னிடம் சொல்லத் துடிக்கிறேன்!
நீ-
ஓதுங்கிப் போகும் ஒவ்வொரு கணமும்
கடலாய்க் கண்ணீர் வடிக்கிறேன்!

பல இன்னலுக்கு பின்.....

அன்பே பல இன்னலுக்கு பின்
ஒன்றாக இனைந்தோம் ஒரே மணமேடையில்
நீ மணப்பெண்ணாக ?
நான் மப்பிள்ளை தோழனாக ?

நீ ....! நீதான்

மலர்களில்
வண்டுகளின் எச்சில்!!!
நிலவில்
மனிதனின் கால்தடங்கள்!!!
தென்றலில்
பலரின் மூச்சுக்காற்று!!!
களங்கப்பட்ட உவமைகளில்
உன்னை கவிதையாக்க
விரும்பவில்லை
நீ ....! நீதான்

மெளனமாக......

கல்லால் அடித்து கூட
உன்னை காயப்படுத்த முடியும்
ஆனால்
நீ சொன்ன வார்த்தையை விட
அது பெரிதாகாது

கத்தியால் குத்தி கூட உன்னை
இரத்தம் சிந்த வைக்க முடியும்
ஆனால்
நீ காட்டிய மெளனத்தை விட
அது பெரிதாகாது.

நீ சொல்லும் வார்த்தையை
மெளனத்தின் மூலம் அறிய
மெளன மொழியை கற்கிறேன்
மெளனமாக

அவள் காதல்!

எனக்கு தெரிந்த கவிதை அவள் பெயர்!
எனக்கு தெரிந்த ஓவியம் அவள் முகம்!
எனக்கு தெரிந்த கலை அவள் சிரிப்பு!
எனக்கு கிடைத்த பரிசு அவள் காதல்!

யாருக்கு யார் ஒளி தந்தது ?

இருட்டுக்குள்
ஒளிர்கிறீர்கள்
நீயும்,
உன் கை மெழுகுவர்த்தியும்.
ஒரே ஒரு சந்தேகம்
யாருக்கு
யார் ஒளி தந்தது ?

நீயாக!!!

என் கண்களில் நீரில்லை
எழும்பி கீழே வருமுன்னர்
இதயதாபத்தால் தீயாக
எரிக்கப்படது ஆவியாக

என் நாவில் சொல்லில்லை
சொல்லிவிட எண்ணுமுன்னர்
நெஞ்சுத் தணல் நெருப்பாக
நீக்கிவிட்டது மௌனமாக

என் காலில் இயக்கமில்லை
எழுந்து நடக்க முயலுமுன்னர்
உள்ளத்து உஷ்ணம் உருக்கிவிட
ஊனமுற்றது உண்மையாக

என் இதழில் சிரிப்பில்லை
மெள்ள விரிந்து மலருமுன்னர்
எண்ண சோகம் இயல்பாய் வாட்ட
மங்கி மறைந்தது மந்தமாக

என் நெஞ்சில் நினைவில்லை
எங்கும் நீயே நிறைந்திருக்க
எண்ணமாய் எழும்பி விரியுமுன்னர்
இதயம் நிறைந்தது நீயாக!!!

மறந்து விடு என்றார்கள்.

உன்னை மறந்து விடு என்றார்கள்
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும் மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!

Sunday, February 21, 2010

சுட்ட கவிதையா?

சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்
சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?

புரியவில்லை !!!!!

காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....

என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...

சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...

என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...

எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது?

என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

Friday, February 19, 2010

ஒரு தலைக் காதல்

பெண்ணே…உனைக்கண்ட நாள்
முதல்பித்துப்பிடித்த பித்தனானேன்
உன் தரிசனத்துக்காய்தவம் கிடந்தேன்
உன் பார்வைக்காய் வேள்வி கொண்டேன்
உன் காதலுக்காய்யாகம் செய்தேன்..
அத்தனையும் வீணாக்குவது போல் இன்று
உனக்கு திருமண நாள் ஏன் என் அருமை புரிய வில்லை
உனக்கு உன்னை நான் காதலித்தது
உன் ஆஸ்த்திக்காக அல்ல
உன் அந்தஸ்துக்காகவும் அல்ல
உன் அழகுக்காகவுமல்ல
உன் குழந்தை போன்ற குணத்துக்காக மட்டும்தான் ஆனால்…..
நீ நிரூபித்திருக்கிறாய்ராடசத மனமுள்ளவள் என்று
நீ நீடூழி வாழவாழ்த்துகிறேன்

கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!
எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!

உன் அன்பைப் பெறுவதற்காய் சில ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய் தவமிருந்து!!

காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம் வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும் அரக்கன்!!

காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல் விழுதாகிவிட்டதடி!!

உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

உன்னோடு சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என் அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!

இந்த காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு

அன்பென்றே பெயர்

என் மீது படர்ந்திருக்கும்
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!

அர்த்தங்கள் நிறைந்த மௌனம்

எத்தனை தடவைதான் என்
பார்வை அம்புகள்
உன் மேல்....
உன் மௌனத்தைக்
கலைப்பதற்கு

உன் மௌனம் என்னைக்
கொல்கிறதா
கொள்ளையடிக்கிறதா.........???
இன்னும் புரியாமல் நான்
உன் பின்னால்

என்னை என்றும் காதலிப்பதை
மௌனமாக சொல்கிறாயா
இல்லை
காதல் மௌனமானது என்கிறாயா ?????

நம் காதலின் சக்தி
பேசும் ஒலிச்சக்திகளால்
வீணாகி விடாமல்
காதலுக்கு சக்தி சேமிப்பா ??
சொல் மௌனமாய்
ஒரு வார்த்தை

வார்த்தைகளுக்காய் எத்தனையோ
கவிஞர்கள் காத்திருப்பு
ஆனால்
நீ
எத்தனையோ
கவிதைகளை பிரசவிக்கிறாய்
அழகிய மௌனத்தால்....


நிலவைப் பார்த்ததும்
நான் ரசிப்பது
ஒளிக்கீற்றுக்களை அல்ல
அதன் மௌனத்தை தானடி
அதுதான்...
உன் மௌனத்தின் ஆழத்தில்
இன்னும்
நான்
முத்தெடுக்கத் தவிப்பது

உன் மௌனத்துக்குள்
மூழ்கிவிட்டால் போதுமடி
காதலின் பாதி வாழ்க்கையை
வாழ்ந்துடுவேன்
மீதி வாழ்கையைப் பற்றியே
என் கவலை..


நீ
மௌனமாகவே இருந்துவிடு
இல்லையேல்
பிள்ளையார் பிடிக்கப்போய்
குரங்கான கதையாக
என் காதல் ஆகிவிடும்
என்ற பயம் எனக்கு.......

போய் வா.....

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்

உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்

உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது

கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்லை
ஆறுதல் சொல்ல எனக்கு

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை
சேர்த்துக்கொண்டு

சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே
புன்னகைத்துக்கொள்
சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம்
என்னிடம் இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்

உன் திருமுகம்
என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை
என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....

ஒரு பொய்யாவது சொல்

நித்தம் மௌனம் கலைத்து
சத்தம் போட்ட பூக்கள்
மரணித்துவிட்டதென எண்ணும்
விழிகளில் காதல தீ மூட்டிய
பூவே...........
உன்னால் உதிர்ந்த சருகுகளாலான
என்மனதை சாம்பலாக்கவாவது
உதிர்த்துவிடு
உன் புன்னகையால் ஒரு வார்த்தை

காதலி .........

என் முகவரி நீ
கவிதையின்
முதல்வரியும்
நீ......


உறவுக்கு வழிவகுத்த நீ
காதல் வளர்த்த தீ .... !
இனிக்கும் இத்துன்ப நோய்க்கு
மருந்தும் நீ ....


பத்துவிரல் கோர்க்க
அத்துவிதமாய் சேரும்
இன்பத்தூறல் கவிதைக்கு
கற்பனையும் நீ ....


என் விழிகளின் வலி உணர்ந்து
கண்ணீரைச் சொரிந்தவலும் நீயே
விழி மூட வலி கொடுப்பவளும் நீயே
உன் ஈரவிழிப்பார்வை
கற்றுத்தந்தது
காதல் வாழ்வை...

என் முதல் காதல்..

கற்பனை உலகை எட்டும் போது
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது கவிதை
வடிவம் பெற்றது

உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச் சுவடுகள்..
உன் கண் சிமிட்டும் சந்தத்தில்
என் மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் அன்றுதான்
நான் தடுமாறிய முதல் தினம்

தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என் நெஞ்சினில்
நீ ஒரு
மொனாலிசாவாக....

உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....

நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
இன்னும் என் மனசில்
மெகா சீரியலாக.....

காதல் வலி

நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல

இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல

தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே

இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே

ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு

நீ வருவாய் என........

காதல் வானில்
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....

கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்

மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....

"நான் உன்னை விரும்பினேன்"

நீ என்னை விரும்ப வேண்டாம்
"நான் உன்னை விரும்பினேன்"
என்பதை மட்டும் அறிந்து விடு

"கசப்பான" உண்மை

மீண்டும் நீ சொன்னதை நினைவு படுத்துகிறேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...
அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்

என் காதல் மனசு

எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு

தொலைத்தபின்....

வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன் காதலி
என்றஆயுதத்தை தொலைத்தபின்

கேக்கிறதா

உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா

என் காதலை நிருபித்திருக்கலாம்

உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?