Tuesday, April 26, 2011

நீ அங்கு இருக்க.. நான் இங்கு தவிக்க..


















நீ அங்கு இருக்க.. நான் இங்கு தவிக்க..
நமக்காக சுருங்காதோ.. இந்த நீண்ட பாதை..?

வழித்துணை நீ என்றாய்..
- வலி என் உள்ளே..
- துணை மட்டும் இல்லையடா என் முன்னே..!

இரு கையில் மருதாணி அணிந்தாலும்..
உன்னை அணைக்கையில்.. அழியாத
வரம் கேட்டேன்…! நிஜத்தில் மருதாணி அழியா இருக்க…
நினைவில் அணைப்பது நியாயமா?..

பொறுமை என்னும் தீயில் எரியதானோ
பெண்ணாய் பிறந்தேனோ..?…

அடக்கம் ஒழுக்கம் என்ற கட்டுபடினுள் என்னை அடக்கலாம்..
பெண் ஆசை அடங்குமா?…

தீராத மோகம்… என் உள்ளே..
தீர்த்தம் போல.. வரம் தந்தாய்..

நினைவில் வாழும் சுகத்தை தந்தவனே…
நிஜத்தில்.. ஏனோ சலனம் தந்தாய்…

பிரிவு… வெகு விரைவில் குறைந்தாலும்..
பிரிவால்.. நாம் பிரிந்ததை எண்ணி..
பிரிவு கூட கதற வேண்டுமடா ..
பிரித்து விட்டேனே என்று….!

நீண்ட கவிதைகள் என்று, புறம் தள்ளி விடாதீர்,..!!!!
















அன்று நான் தொலைத்த என் கவிதைக்கட்டிற்காய்,
இன்று வரை நான் கவலைப்பபட்டதுண்டு,
அன்று வி்டிருந்தால் என் இளைய தளம்,
என்றோ காதல் தளம் ஆகியிருக்கும்.
எனிலும் சந்தோஷப்படுகிறது என் மூலதனம்,
மட்டும் எப்போதும் என்னிடம்,


என்றும் ஒட்டியே இருப்பதால்.
இதுவும் காதலுக்காக தான்,
ஆனாலும் கொஞ்சம் வித்தியாசம்,
சகோதர காதலுக்காய்(பாசம்)
இது என் கல்வியறை காத்திருக்கிறது,
௨ன் கண்களையும் காதலையும் திறக்க,
நீண்ட கவிதைகள் என்று,
புறம் தள்ளி விடாதீர்,
ஒரு வரிகளில் சுருக்கி எழுதி,
பெருக்கிக் கொள்ள விரும்பவில்லை,
என் நேரத்தை.
என் ௨றவுகளு்கு கொடுப்பதற்கு,
என்னிடம் ஒன்றுமே இல்லை,
என் கவிதைகளைத் தவிர.
முன்பெல்லாம் கண்மூடும் வரை கவிதைகள்;
கிறுக்குகின்றது என் கைவிரல்கள்…!
நடு இரவினிலே,
இதயம் மட்டும் தூங்காமல் இருப்பதால்..
இன்றோ..,
விடிய விடிய கவிதைகள் எழுத விரும்புகிறது;

“நீ கூறியவை”

என் கண்கள் அழகு என்று யார் சொன்னது?
என் கூந்தல் அழகு என்று யார் சொன்னது?
என் ௨தடு அழகு என்று யார் சொன்னது?
நானே அழகு தான் நீ அருகில் இருந்தால் மட்டும்..!

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?