Monday, January 18, 2010

காத்திருப்பேன்!

உனக்காக நான்
காத்திருக்கா விட்டாலும்
நம் காதலுக்காக வாழ் நாள்
முழுவதும் காத்திருப்பேன்
என் உயிர் காதலே!

உள்ளங்கையில் நிழற்படமாய் நீ...!

நம்மிருவரின் அன்பை
மொத்தமாய் வெளிக்காட்டிய
அந்த ஒருசில நிமிடங்களின்
முத்தபரிமாற்ற பரிவர்த்தனையை
வெட்ட வெளிச்சமாய்
என்னுள் படம்பிடித்து காட்டுகிறது
குளித்துத் துவட்டிய பின்னும்
உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓரிரு நீர்த்துளியையொத்த
உன் நினைவுகளை
தேக்கிவைத்திருக்கிறேன்
உள்ளங்கையில்
நிழற்படமாய் நீ...!

கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள்

கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள் தொலைத்து...
உன் நினைவுகளால் விழித்திருந்த இரவுகள்...
சுவாசப்பை முழுதும் நினைவுகள் நிரப்பி...
மூச்சு திணறிய ராத்திரி தருணங்கள்...

அறிந்தும் அறியாமலும்

பக்கத்தில் இருந்தும்
பார்க்காமல் இருக்கிறாய்
கேட்கத் தெரிந்தும்
கேட்காமல் இருக்கிறாய்
பேசத் தெரிந்தும்
பேசாமல் இருக்கிறாய்
என் நிலை தெரிந்தும்
தெரியாததுபோல் இருக்கிறாய்
என் மனம் அறிந்தும்
மௌனமாய் இருக்கிறாய்
என் இந்த உள்ளக் குமுறல் தெரிந்தும்
தெரியாதது போல் இருக்க உன்னால் முடியும் !
அதற்காய் நானும் இறப்பேன் ஒரு நாள் ...
என்னை நீ அறிய, முழுவதுமாக ...
மௌனம் ஒன்றே கொண்டு
அழும் என் நிலை, ஏனோ மாற்றார் அறியார்
நீயுமா?
ஊமையின் குமுறலும் சத்தமாய்
அவர்களுக்கு கேட்க,
அழுகிறேன் என் மௌனத்தோடு யாரும் அறியாமல்.
வருவாய் ஒரு நாள் என் அருகில்
என்ற நம்பிக்கையோடு
வழி(லி) மேல் விழி வைத்து...

இதுதான் நரக வேதனையோ...?

நான் ஆசையாசையாய்
அவளிடம் பேசும்போது
அவளோ இடைமறித்து
இன்னொருவனைப் பற்றி
என்னிடம் ஆசையாசையாய்
பேசிக் கொண்டிருக்கிறாள்
இதுதான் நரக வேதனையோ...?

எப்படியென்று ...!

உரையாடும் நேரங்களில்
உன் மௌனத்தால்
உணர்ந்துகொண்டேன்
உயிரோடு
உறைந்துபோவது எப்படியென்று ...!

கடந்து செல்...!

உன்னிடம் சொல்லநினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ போகிற பாதையில்
கீழே சிதறி கிடக்கும்
கொஞ்சம் அதை மிதிக்காமல்
கடந்து செல்...!

உன்மேல்...!

நான் ஆசைப்பட்ட
எல்லாமே கிடைத்ததில்லை
ஆனால் ஆசைப்படாமலே
எதுவும் கிடைப்பதில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்னால்
ஆசைப்படுகிறேன்
உன்மேல்...!

இருப்பது எந்த இடம்.

கனவுப் பாதையென்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தான்
அழிவுப்பாதையென்று
அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்
கவிதைப் பாதையென்பதும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எல்லாப்பதையும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எந்தப் பாதையாய்
இருந்தால் என்ன
ஏதோ ஓர்
அழிவுப் பாதை
நீண்ட
நெடும்பாதை
நடக்க நடக்க மாயமாய்
நீளும் பாதை
எப்பொழுது
வந்து சேரும் அத்தம்
இப்பொழுது
இருப்பது எந்த இடம்.

Sunday, January 17, 2010

எத்தனை கவிதையும் எழுதலாம் நான்

என் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்
உறக்கத்தை விரும்புவதில்லை நான்
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்

நீ காட்டிக் கொடுக்கும் வரை

" ஏன் துடிக்கிறாய்? " என்று
இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை
நீயும் கேட்காதே என்னிடம்
" ஏன் என்னை காதலிக்கிறாய் ? " என்று
சொல்ல தெரியாது எனக்கு,
காதலிக்க மட்டும்தான் தெரியும் ......
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை

புதிய காதலி.

நான் எழுதிய அர்த்தம் வேறு.
எனது நண்பன் கூறிய பதில் வேறு.
“ஆமாம்.
எனது புதிய காதலி தான்.
“நீ” ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய காதலி தான்!”

உன் மனதோடு மட்டுமே !!!

கடலோடு கரைந்தாலும்
மழைத் துளியாய் உன் மடி மீது!
வெயிலோடு வீழ்ந்தாலும்
விடியலாய் உன் வாசலில்!
மண்ணோடு மரித்தாலும்
மண்வாசனையாய் உன் மனதோடு மட்டுமே !!!

கோடி புண்ணியம்..

என்னை ஞாபகப்படுத்தும்
எந்தபொருளையாவது
காண நேர்ந்தால் தயவுசெய்து அ
னாதையாய் விட்டுவிடாதே
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில்
போட்டுவிடு கோடி புண்ணியம் கிடைக்கும்

கவிதை...

உனக்கு யாரோ
ஒருவனின் கவிதை பிடித்ததில்
இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்னில் ஏதாவது ஒன்று
உனக்கு பிடித்ததில் கவிதையாவது
இருக்கட்டுமே என்று

நீதான்....

இப்பொழுது
எல்லாம் உன்னை
நினைக்காத போதும் கண்ணீர்வருகிறது
நீதான் என் கண்ணில் படாமல் வாழ்கிறாயே

என்னை.....

என்னை
எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை
மட்டும் பிடித்தது அதே
என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்குமட்டும்
என்னை....

மனசு..

வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன் காதலி
என்றஆயுதத்தை தொலைத்தபின்
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு

கேக்கிறதா ?

உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா

Tuesday, January 12, 2010

யார் உன்னை நினைப்பது

இரவிரவாய்
எனக்கும் என் பேனாவுக்கும் மோதல்
யார் உன்னை அதிகம் நினைப்பது என்று

கிறுக்கல்...

என் நாட்குறிப்பில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளை
எழுதித் தொலைக்காமல்
வரைந்து வைத்திருக்கின்றேன்!
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்...

கனவோ...இது நினைவோ..

கனவோ...இது நினைவோ
குழம்பினேன் நானே

நிழலோ இல்லை நிஜமோ
தொலைந்ததும் நானே

அவன் வந்தது...நான் பார்த்தது...
அவன் சிரித்தது...நான் ரசித்தது...
உண்மையா...அட இல்லையா?

யார் தான் வந்து கண்ணின் முன்னே காதல் கோலம் போட்டது
ஏன் தான் எந்தன் இதயம் இன்று இசையாய் மெல்லத் துடிக்குது

வானில் கூட சேர்ந்தே நடக்க மேகம் ஒன்று அழைத்தது
நேரில் நானும் அவனைப் பார்க்க நெஞ்சம் ஏதோ செய்தது

அவன் சொன்னது...நான் கேட்டது...
அவன் தந்தது...நான் பெற்றது...
உண்மையா... அது உண்மையா?

காதில் சொன்ன வார்த்தை ஏனோ பாதி தானே கேட்டது
மீதி கேட்க..மீண்டும் கேட்க ஏனோ மனதும் ஏங்குது

முத்தம் தந்த தடையம் கூட முகத்தைப் பார்த்துச் சிரிக்குது
மூச்சில் சேர்ந்த வெப்பம் என்னை மூர்ச்சையாக்கி விட்டது

Wednesday, January 6, 2010

உன் நினைவுகள்

இவன்
உடல் உயிரை சுமந்திருக்கும் வரையிலும்
உன்
நினைவுகள் இவனுள் நிறைந்திருக்கும்.

தழுவிஅழுகிறதே

உனது முகத்தை
எனதுஇதயம் உயிரில் எழுதியதே
உறக்கம் மறந்த விழிகள்
அதனை தழுவிஅழுகிறதே

உன் நினைவுகள்.....

எத்தனை காலகள் மிதித்தாலும்
எழுந்து நிற்கின்ற புற்களைப்போல்
காலம் எத்தனை முறை மிதித்தாலும்
எழுந்து நிற்கின்றன உன் நினைவுகள்.....

தூக்கமே வருகிறது...

எல்லோருக்கும் தூக்கம் வந்த பிறகுதான்
கனவு வரும்....
எனக்கோ உன் கனவு வந்த பிறகுதான்
தூக்கமே வருகிறது...

சொர்க்கம்தான்...

சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது
என்று சொல்பவர்கள்
சொல்லிவிட்டுப் போகட்டும்.....
எனக்கு சொல்லாத காதலே
சொர்க்கம்தான்...

எனக்கு மரணம் என்பது

என் உடலில் உயிராக ஓடிக்கொண்டிருப்பது
உன் நினைவுதான்....
எனக்கு மரணம் என்பது
உன் நினைவுப் பிரிதல்தான்....

எங்கோ இருக்கிறாய்...

நீ ஒரு தெய்வத்தைப் போல்
எங்கோ இருக்கிறாய்...
நான் ஒரு பக்தனைப் போல்
எங்கிருந்தாலும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறேன்....

தருவாயோ மீண்டும் என்னை

கண்ணீரில் உன்னைத்தேடி சருகாய்த்தான் போனேன் இன்று
உன்னைநான் கண்டநேரம் என்னை நான் இழந்தேன் இங்கு
நெஞ்செங்கும் உந்தன் நினைவே
போகாதே எந்தன் உயிரே வாழத்தான் தோன்றாதிங்கே
பார்ப்பேனோ இனிமேல் உன்னை தொலைத்தேனே உன்னில் என்னை
வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை

வாங்க முடியவில்லையே உன்னிடம்...

ஏதோ சில கவிதைகளை மட்டும் எழுதியே
சுலபமாய் ‘கவிஞன்’ என்கிற பெயரை
வாங்கிவிட்டேன்.....

ஆனால்...

எவ்வளவு காதலித்தும் அவ்வளவு சுலபமாய்
‘காதலன்’ என்கிற பெயரை
மட்டும் வாங்க முடியவில்லையே
உன்னிடம்...

ஈரமாய் மிஞ்சும்

காலங்கள் போகும்
இது கதையாகிப்போகும்
உன்னோடு வாழ்ந்த ஞாபகம்
மட்டும் நெஞ்சினில் ஈரமாய் மிஞ்சும்

வலி

வலியை
விட வலிக்கிரது
உன் நினைவுதரும் வலி

நினைக்காமல் இருக்க முடிவதில்லை

உன்னை நினைக்காமல்
இருக்க முடிவதில்லை
இரவின் விழிப்பிலும்
என் தோழில் நீ சாய்ந்திருக்கின்றாய்

மறந்து போனாய்?

இந்தப் பூமியில்
எல்லாமே உனக்கு நினைவிருக்கிறது
எப்படி உன்னை நேசித்த உள்ளத்தை
மட்டும் மறந்து போனாய்?

சின்னாபின்னமாக்கிவிட்டாயே

தேனீர் போல
சிறுகசிறுக சேர்த்தேனே
சீரூட்டிப் பார்த்தேனே
அதை சின்னாபின்னமாக்கிவிட்டாயே

வாழ வி௫ப்பமில்லை

நீ இல்லாத இவ்வுலகில் வாழ
எனக்கு வி௫ப்பமில்லை இ௫ந்தும்
உன் நினைகளைப் பிரிந்து சாகவும் முடியவில்லை
இந்த உலகத்திலி௫ந்தே அன்னியப்படுத்தப்பட்டதாய்
உணர வைக்கிறாயடி கண்ணே

Tuesday, January 5, 2010

என்றும் துனையாக.

உன் மனதில்- உன் இதயத்தில்
உன் கனவில்-உன் வாழ்வில்
யாரேனும் இருக்கலாம் -ஆனால் யாரும்
இல்லாதபோது நான் இருப்பேன் -உன் அருகில்
என்றும் துனையாக.

அதே இடத்தில்



தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்...

ஏங்குதடி நெஞ்சம்..

உன் மடியில்
தலைசாய்த்திருந்த தருணத்தில் கூட
நினைக்கவில்லை உன் பிரிவை
உன் விரல் பிடித்து நடைபழகிய அந்நாட்களை
திருப்பிக்கொடுப்பாயா மீண்டும்
உன் காதலுக்காக ஏங்குதடி நெஞ்சம்..

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?